கடந்த ஆண்டு ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தை ஆதார் என்ற வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 120 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆதார் ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'மித்ரன், நோட்பந்தி, காவ் - ரக் ஷக்' போன்ற வார்த்தைகளும், இந்த சிறப்பை பெறுவதற்காக பரிசீலிக்கப்பட்டன.
இருப்பினும், பிற வார்த்தைகளை விட, ஆதார், நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்ட வார்த்தையாக இருந்ததால், அதற்கு, கடந்த ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தை என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது என சவுரவ் திவிவேதி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், இலக்கிய திருவிழாவில் தெரிவித்துள்ளார்.