சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான `பத்மாவத்' படம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதனால் கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெளிவர இருந்த படம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பட்டது.
சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்கப்பட்டு, சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து படத்தை வருகிற ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்மாவதி எனும் ''பத்மாவத்'' ஜன.25-ல் ரிலீஸ் என தகவல்!!
இந்நிலையில், பத்மாவத் திரைப்படம் குஜராத் திரையரங்குகளில் வெளியாகாது என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். பத்மாவத் திரைப்படத்திற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பி வருவதால், பாதுகாப்பு கருதி குஜராத்தில் பத்மாவத் திரைப்படம் வெளியாகாது என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் "பத்மாவத்" வெளியிட அனுமதி இல்லை!
முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்திலும் பத்மாவத் திரைப்படம் வெளியாகாது என அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, "பத்மாவத்" திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
#Padmavat to be released worldwide in three languages- Hindi, Tamil & Telugu on 25th January 2018, to have an IMAX 3D release: Viacom18 Motion Pictures & Bhansali Productions pic.twitter.com/wBwEEjUero
— ANI (@ANI) January 14, 2018