பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து,காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் ,ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ் புரா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிறிய ரக மோட்டார் குண்டுகளையும் அவர்கள் தாக்குதலில் பயன்படுத்தினர்.
தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தவே அந்த இடத்தில் வசித்து வந்த பொதுமக்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மற்றொருவர் சிகிஇச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதேபோன்று,நேற்று முன்தினம் அதே பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார் மற்றொரு வீரர் மற்றும் கிராம மக்கள் காயமடைந்தனர் என்பது குறிபிடத்தக்கது.
A civilian dead and a BSF jawan injured in ceasefire violation by Pakistan in RS Pura sector #JammuAndKashmir pic.twitter.com/a2VQqFq1tu
— ANI (@ANI) January 20, 2018