காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார்.
Prime Minister, Shri @narendramodi to inaugurate the longest highway tunnel of India at #ChenaniNashri on 2nd April, 2017. pic.twitter.com/gHhsvSG4wo
— MORTHINDIA (@MORTHIndia) March 26, 2017
ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை ஆகும். இந்த சுரங்கப்பாதையால் வாகன ஓட்டிகளுக்கு 2 மணி நேரம் மிச்சமாகும். ஆண்டுக்கு ரூ.99 கோடி மதிப்பிலான எரிபொருளும் சேமிக்கப்படும். இந்த சுரங்கப்பாதையை பிரதமர் இன்று திறந்து வைக்க உள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுரங்கப்பாதையை திறந்து வைத்தபின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டல் பல்லியன் பகுதியில் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். முன்னதாக உ.பி.,மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.