பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல்காந்தி போராட்டம் நடத்தி வருகிறார்.
பிரபல நகை வியாபாரி, நிரவ் மோடியும், அவரது மாமாவும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன அதிபருமான, மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், வங்கி அதிகாரிகள் துணையுடன், 12,600 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.
இதையடுத்து, இருவரும், தற்போது, வெளிநாடுகளுக்கு தப்பியோடியதை அடுத்து, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை தீவிரப்படுத்தி உள்ளன.
இதை தொடர்ந்து, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, அவர்களுடன் தொடர்புடைய தனி நபர்கள், நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட, 64 பேர், தங்கள் சொத்துக்களை விற்க, என்.சி.எல்.டி., எனப்படும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது.
என்னினும், காங்கிரஸ் எம்பிக்ககள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல்காந்தி போராட்டம் நடத்தி வருகிறார்.
More #Visuals from Parliament in #Delhi where Congress MPs in presence of party president Rahul Gandhi held protest over #PNBScam pic.twitter.com/8IUuVh6Uyn
— ANI (@ANI) March 6, 2018