மும்பையில் மின்சார துண்டிப்பு காரணமாக மோனோ ரயில் ஒன்று செம்பூர் நிலையத்தை நெருங்கும் போது திடீரென நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, நிறுத்தப்பட்ட ரயிலை மீட்பதற்காக உடனடியாக அதிகாரிகள் வாடாலா டிப்போவில் இருந்து மற்றொரு ரயிலை வர வழைத்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ரயிலோடு புதிதாக வரவழைக்கப்பட்ட ரயில் இணைக்கப்பட்டு, பிளாட்பாரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையே, இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதுவது போன்ற காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தது.
இந்த செய்திக்கு மும்பை மாநகர மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இரண்டு மோனோ ரயில்கள் நேருக்கு நேர் சென்று விபத்துக்குள்ளாக இருந்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்று கூறினார்.