இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 9000 பணியிடங்களை நிறப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
இந்திந ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8169 கான்ஸ்டேபில் பதவிக்கும், 1120 சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கும் பணியிடங்களை நிறப்புவதற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கான்ஸ்டேபில் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள 8169 காலியிடங்களில் 4403 ஆண்களும், 4216 பெண்களும் சேர்க்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 301 பெண்கள் மற்றும் 819 ஆண்கள் சேர்க்கப்படவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை குறித்து முன்னதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
Indian Railways releases more than 9,000 jobs for Constable & Sub Inspector posts in Railway Protection Force and Railway Protection Special Force, opening up new opportunities for youth. Get detailed information at https://t.co/ghSFBYVnrs pic.twitter.com/U7AWYFAXtT
— Piyush Goyal (@PiyushGoyal) May 21, 2018
முக்கிய தேதிகள்.
- ஆன்-லைன் விண்ணப்பங்கள் ஆரம்பம் - ஜூன் 1, 2018
- விண்ணப்பிக்க கடைசி நாள் - ஜூன் 30, 2018
- கட்டணம்(ஆன்லைன்) செலுத்த இறுதி நாள் - ஜூலை 2, 2018
- கட்டணம்(ஆப்லைன்) செலுத்த இறுதி நாள் - ஜூலை 5, 2018
மேலும் கூடுதல் விவரங்கள் அறிய RPF/RPSF Recruitment-2018 இணைப்பினை கிளிக் செய்யவும்.