ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை சீற்றம்; குலுவில் இரண்டு பேர் பலி..

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழையால் வெள்ளபேருக்கு, குலுவில் இரண்டு பேர் பலி!!

Last Updated : Aug 19, 2019, 07:08 AM IST
ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை சீற்றம்; குலுவில் இரண்டு பேர் பலி.. title=

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழையால் வெள்ளபேருக்கு, குலுவில் இரண்டு பேர் பலி!!

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக மண்டி, காங்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியில் உள்ள தொங்கு பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

மழையின் காரணமாக  பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளான குலு, மணாலி இடையே சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. 

நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை, இந்தோ திபெத் எல்லைக் காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குலு, கின்னார், மண்டி மாவட்டங்களில் பலத்த மழையால் சாலைகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குலு, சிம்லா மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்குத் திங்கட் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது பெய்துவரும் கனமழையால் இமாச்சல பிரதேசத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. மழை தொடர்பான விபத்துக்களில் சுமார் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Trending News