ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கூட்டத்தில் பூமி பூஜை தேதி இறுதி செய்யப்பட உள்ளது..!
ராம் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா அயோத்தி புனித ஸ்தலத்திற்கு அருகில் முகாமிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா சனிக்கிழமை (ஜூலை 18) அயோத்தியில் நடைபெற உள்ள உத்தேச ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கூட்டத்தில் கலந்து கொள்வார். நிருபேந்திர மிஸ்ராவுடன், மூத்த பொறியாளர்கள் குழுவும் அயோத்திக்கு வந்துள்ளது, இது கோயிலின் கட்டுமானத்தை உன்னிப்பாக ஆராயும்.
இந்த் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக அறக்கட்டளை உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர். இன்றைய கூட்டத்தில், கோயில் கட்டுமானம் தொடங்குவதற்கான தேதி இறுதி உறுதி செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, பிரதமரால் அங்கீகரிக்கப்பட்ட தேதியை அறிவிப்பார்" என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கோயில் கட்டுமான பணிகள் துவங்கும் சந்தர்ப்பத்தில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்வார்.
READ | அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல், காஷ்மீரில் பயங்கரவாதத்தின் 'code 130' என்ன?
ஆதாரங்களின்படி, ராம் ஜம்ம பூமியில் கட்டுமான பணிகள் ஆகஸ்டில் துவங்க வாய்ப்புள்ளது. கோவில் கட்டுமான விழா பல மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன் கொண்டாடப்படவிருந்த நிலையில், கோவிட் -19 பரவலுக்குப் பிறகு பங்கேற்பாளர்களின் பட்டியலில் பிரதமர் மோடி, பகவத், உ.பி. முதல்வர், சில அமைச்சர்கள் மட்டுமே இருக்கக்கூடும் மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், ஆதாரத்தை தெரிவித்தனர்.
இதில், முறைப்படி கோவில் கட்டுமானத்தை துவங்கும் வகையில், கர்ப்ப கிரஹம் அமையும் இடத்தில், பூமி பூஜை நடத்தப்படும். பின் பணிகள் விரைந்து நடத்தப்படும் என, அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது குறிப்பிடதக்கது.