சுதந்திர தினத்தையொட்டி ஜம்மு&கஷ்மீர் பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன!
இந்திய நாட்டின் 72 வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் ஆகஸ்டு 15 ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படவுள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாடுமுழுவதும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, இந்தக் கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றவுள்ள டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அதிக அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியாக பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஆயிரகணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கபடுகிறது.
#JammuAndKashmir: Security has been heightened across the state ahead of #IndependenceDay2018, visuals from Jammu. pic.twitter.com/XVVOIAWDfo
— ANI (@ANI) August 14, 2018