Shaliza Dhami: இந்திய விமானப்படை வரலாற்றில் போர் பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் ஷாலிசா தாமி..!

Shaliza Dhami: இந்திய விமானப்படையானது குரூப் கேப்டன் ஷாலிசா தாமியை மேற்கத்திய செக்டாரில் உள்ள ஒரு போர்ப் பிரிவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 7, 2023, 06:55 PM IST
Shaliza Dhami: இந்திய விமானப்படை வரலாற்றில் போர் பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் ஷாலிசா தாமி..! title=

உலகின் முன்னணி விமானப்படைகளில் ஒன்றாக இருக்கும் இந்திய விமானப் படையின் போர் பிரிவில் இதுவரை எந்தவொரு பெண்ணும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதில்லை. அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் விதமாக முதன்முறையாக இந்திய விமானப் படையின் போர் பிரிவில் தலைமைப் பொறுப்பில் ஷாலிசா தாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது இந்திய விமானப் படையில் விங் கமாண்டர் பொறுப்பில் இருக்கிறார் அவர். உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய விமானப்படைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஷாலிஷா தாமி நியமனம் அமைந்துள்ளது. 

மேலும் படிக்க | கர்ப்பமான 15 வயது சிறுமி! Youtube பார்த்து பிரசவித்த பின் குழந்தையை கொன்ற கொடூரம்!

அவர் மேற்கத்திய செக்டாரில் முன்னணி போர் பிரிவின் தலைமை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர்.  இந்த மாத தொடக்கத்தில், ராணுவம் மருத்துவப் பிரிவுக்கு வெளியே முதல் முறையாக பெண் அதிகாரிகளை கட்டளைப் பணிகளுக்கு நியமிக்கத் தொடங்கியது. அவர்களில் சுமார் 50 பேர் செயல்பாட்டு பகுதிகளில் பிரிவுகளுக்கு தலைமை தாங்குவார்கள். இது வடக்கு மற்றும் கிழக்கு கட்டளை பகுதிகளில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.

குரூப் கேப்டன் தாமி -ஐ பொறுத்தவரை 2003 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். 2,800 மணி நேரம் போர் படை விமானத்தில் பறந்த அனுபவம் பெற்றவர். ஒரு தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர். இதுமட்டுமல்லாமல் இன்னும் பல தகுதிகளை கொண்டிருக்கும் அவருக்கு, இத்தகைய உயரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. IAF-ல் ஒரு குழு கேப்டன், இராணுவத்தில் ஒரு கர்னலுக்கு சமமானவர். இரண்டு முறை விமான படை தலைமைத் தளபதியால் பாராட்டப்பட்ட ஷாலிசா தாமி, தற்போது ஒரு முன்னணி விமான கட்டளைத் தலைமையகத்தின் செயல்பாட்டுக் கிளையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டுடன், இனி இந்த விஷயமும் இலவசமாகக் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News