பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோர்க்கு எதிராக கடும் நடவடிக்யாக தூக்குத் தண்டனை அளிக்கக்கூடிய சட்டம் இயற்றப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச போலீஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:-
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு சிறைதண்டனை வழங்குவதற்கு பதில் மரண தண்டனை வழங்கும் மசோதா, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என்று கூறினார்.
இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுபப்படும் என்று செளஹான் கூறுகிறார்.
நாட்டில் நடைபெறும் பாலியல் வல்லுறவு குற்றங்களில் அதிக அளவு மத்தியப்பிரதேச மாநிலத்தில்தான் நடைபெறுவதாக தேசிய குற்றப் பதிவுகள் கழகம் கூறுகிறது.
பாலியல் வல்லுறவு குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று செளஹான் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.