Year Ender 2023, Important Events In India: 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கே ஒரு முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்தாண்டு பல துறைகள் அதன் சரிவிலிருந்து மீண்டு கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தின் நிலையை ஓரளவிற்கு எட்டிப்பிடித்துவிட்டது எனலாம். தொழிற் வளர்ச்சி, சுற்றுலா துறை வளர்ச்சி உள்ளிட்டவைகள் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பொருளாதாரத்தை சீர்தூக்கியுள்ளது எனலாம்.
அந்த வகையில், நடப்பு 2023ஆம் ஆண்டை நினைவுக்கூர்வது அவசியமாகிறது. இன்னும் நான்கு நாள்களில் நடப்பாண்டு நிறைவடைந்து, 2024 புத்தாண்டு பிறக்க உள்ளது. தொடர்ந்து, 2023ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை அதாவது முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை காண இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும். தொடர்ந்து ஜூலை முதல் இதுவரையிலான முக்கிய நடப்புகளை இதில் காணலாம்.
ஜூலை
மே மாதம் தொடங்கிய மணிப்பூர் கலவரம் என்பது ஜூலையில் உச்சம் பெற்றது எனலாம். ஆம், இரண்டு குக்கி இன பெண்கள் சாலையில் நிர்வாணமாக நடக்கவைக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளான வீடியோ இணையத்தில் பரவி இந்தியாவையே கொதிப்படைய செய்தது எனலாம். அங்கு இதுபோன்ற பல கொடுமைகள் நடத்திருப்பதாக கூறப்பட்டாலும், இந்த சம்பவம்தான் மணிப்பூர் வன்முறையின் தீவிரத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது எனலாம். இது ஒருபுறம் இருக்க, ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவை நோக்கி ஏவப்பட்டது.
மேலும் படிக்க | Year Ender 2023: இந்த ஆண்டில் இந்தியாவின் தலையாய 10 சாதனைகள்!
ஆகஸ்ட்
இந்தாண்டு ஆகஸ்ட் மாதமும் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக மாறியது எனலாம். ஆக. 23ஆம் தேதி அன்று நிலவின் தென்துருவத்தில் முதன்முதலாக தரையிறக்கம் செய்த நாடு இந்தியா என்ற பெருமையை சந்திரயான்-3 விண்கலம் பெற்று தந்தது. இதுவரையில் வேறு எந்த நாடும் இதனை வெற்றிகரமாக செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மார்ச் மாதம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் திரும்பினார். அவருக்கு எதிரான அவதூறு வழக்கின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர்
இந்திய தலைநகர் டெல்லியில் ஜி-20 உச்சிமாநாடு செப்டம்பர் மாத்தில் நடந்தது. இந்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை நாடாக இந்தியா பொறுப்பு வகித்ததை தொடர்ந்து இம்மாநாடு இங்கு நடத்தப்பட்டது. மேலும், மணிப்பூர் வன்முறை செப்டம்பரிலும் நீடித்தது. செப்டம்பர் வரை 175 பேர் உயிரிழந்ததாகவும், 1000 பேருக்கு மேலானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர்
சிக்கிமில் ஏற்பட்ட அதிகனமழை காரணமாக தெற்கு லோனாக் ஏரி உடைந்ததில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்து தீர்ப்பு வழங்கியது. மேலும், கேரளா மாநிலம் கொச்சியில் கிறிஸ்துவ வழிபாட்டு கூடத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடர் தொடங்கியது.
நவம்பர்
இந்தாண்டின் கடைசி இரண்டு மாதங்களும் தேர்தல் மாதங்கள் எனலாம். இருப்பினும், நவம்பரில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. நவம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. ஆனால் இவற்றை விடவும் மிகவும் அதிர்ச்சிகர சம்பவமும் நடந்தது. உத்தரகாண்டின் சுரங்கத்தில் பணியாற்றி வந்த 41 பணியாளர்கள் மண்சரிவு காரணமாக சுரங்கத்திலேயே சிக்கிக் கொண்டனர். சுமார் 400 மணிநேர (18 நாள்கள்) போராட்டத்திற்கு பின் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
டிசம்பர்
டிசம்பர் 3ஆம் தேதி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானாவில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்தது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது, பாஜக கைப்பற்றியது. தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் ஆட்சியை இழந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் இவற்றைவிடவும் தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட பெருமழை ஆகியவற்றையும் யாராலும் மறக்க முடியாது. மேலும் கடந்த 13ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறி சிலர் உள்ளே புகுந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ