Tunnel collapse in Telangana: தெலங்கானாவின் நாகர்கர்னூல் நகரின் ஸ்ரீசைலம் அணைக்கு பின் பகுதியில் 44 கி.மீ., தூரம் கொண்ட சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (பிப். 22) அன்று காலையில் அந்த சுரங்கத்தில் சில பணியாளர்கள் நீர்க்கசிவு பிரச்னையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
Telangana Tunnel collapse: உள்ளே சிக்கியிருக்கும் 8 பேர்
அப்போது திடீரென சுரங்கம் இடிந்தது. அங்கிருந்து உடனே பலரும் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில், சுமார் 8 பணியாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்களின் நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவரவில்லை.
அந்த 8 பேரில் நான்கு பேர் தொழிலாளர்கள். மீதம் உள்ள நான்கு பேர் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என தெலங்கானா மாநில அமைச்சர் கிருஷ்ணா ராவ் தகவல் தெரிவித்தார். அவர்தான் சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
Telangana Tunnel collapse: இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி
ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில அரசின் சில மீட்புக் குழுவினர் ஏற்கெனவே அங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடற்படை கமாண்டோக்களும் மீட்புக் குழுவினருக்கு உதவுவதற்காக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
2023ஆம் ஆண்டில் உத்தரகாண்டின் சில்க்யரா சுரங்கம் இடிந்தபோது அதில் பல உயிர்களை காப்பாற்றிய அந்த வீரதீர குழுவில் இருந்த 6 பேரும் தற்போது ஸ்ரீசைலம் வந்து மீட்புப் பணிகளில் இறங்கி உள்ளனர். மேலும், தற்போது இந்த சுரங்கம் அதன் நுழைவுவாயிலில் இருந்து சுமார் 13 கி.மீ., தூரம் வரை இடிந்திருக்கலாம் என அமைச்சர் தகவல் தெரிவித்தார். தற்போது மீட்புப் படையினர் கடைசி 100 மீட்டர் தூரத்திற்கு சென்றுவிட்டனர் என்றும் மீட்புப் பணிக்கு தண்ணீரும் சேறும் இடையூறாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Telangana Tunnel collapse: உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு
அமைச்சர் கிருஷ்ணா ராவ் மேலும் கூறுகையில்,"சுரங்கப்பாதைக்குள் சேறு மிகவும் உயர்ந்த அளவிற்கு குவிந்துள்ளதால் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்கள் ரப்பர் ட்யூப்ஸ் மற்றும் மரப் பலகைகளைப் பயன்படுத்தி செல்கின்றனர். உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக கடினமாக உள்ளன, ஆனால் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், எந்த முயற்சியையும் கைவிட்டுவிடவில்லை" என்றார்.
Telangana Tunnel collapse: 8 பேரை மீட்க தீவிர நடவடிக்கை
இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள 8 பேரை வெளியே மீட்டுக் கொண்டு வருவதற்கு கூடுதல் உபகரணங்கள் தேவைப்படுவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சுரங்கப்பாதையின் சுவர்களில் விரிசல்கள் இருந்ததாகவும், அங்கிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருவதாகவும், அங்கிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின.
சுரங்கத்தின் இடிந்து விழுந்த பகுதியில் கூரை இன்னும் நிலையற்றதாக இருப்பதைக் குறிக்கும் வகையில், பாறைகள் பெயர்ந்து விழும் சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வந்தன. மத்திய அரசு மற்றும் மாநில அரசு தரப்பில் தொடர்ந்து மீட்புப் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | சிறு குறு தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கிரெடிட் கார்டு.. மத்திய அரசு அறிவிப்பு
மேலும் படிக்க | பிறந்த குழந்தையை விட்டு எஸ்கேப்... கேரளாவை பதற வைத்த பெற்றோர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ