கிழக்கு லடாக்கில் (Ladakh) ஃபிங்கர் -4 தவிர, பிளாக் டாப், ஹெல்மெட் மற்றும் ரெக்கின் லா பகுதியின் உயரமான இடங்களை தனது கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ள இந்திய ராணுவம் பங்கோங் த்சோ ஏரியைச் சுற்றி தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இந்திய துருப்புக்கள் (Indian Army) தற்போது தங்கள் எதிரிகளை விட அதிக சாதகமான நிலையில் உள்ளன. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த உயரமான மலைப் பகுதிகளில் தங்கள் நிலையை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. சீனர்கள் இப்போது சுஷுல்-டெம்சோக் பகுதியை கண்காணிக்கும் நிலையில் இல்லை.
இது தவிர, மலைப்பகுதிகளில் செய்யப்படும் போர் பயிற்சியில் இந்திய வீரர்கள், சீன படையினரை விட பல மடங்கு சிறந்து விளங்குபவர்கள்
இரு நாடுகளின் படைகளுக்கிடையில் உள்ள மற்றொரு மிகப்பெரிய வித்தியாசம் என்னெவென்றால், இந்திய வீரர்கள் தேசபக்தி நிறைந்தவர்கள். இந்திய இளைஞர்கள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்குடன் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். மறுபுறம், சீனாவில் மக்கள் விடுதலை இராணுவத்தினருக்கு (பி.எல்.ஏ) தேசபக்தியோ, உறுதியான மனமோ இல்லை. அவர் கட்டாயத்தினால் மட்டுமே இராணுவத்தில் இணைகிறார்கள். இந்திய வீரர்கள் தங்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க மிகவும் வலிமையாகவும் நம்பிக்கையுடனும் போராடுவதற்கு இதுவே காரணம்.
ஆகஸ்ட் 30 அன்று பங்கோங் ஏரியின் (Pangong Tso) தெற்கு மற்றும் வடக்கு கரையை இந்திய இராணுவம் கைப்பற்றிய பின்னர், அதை திரும்ப பெற பதில் நடவடிக்கை எடுக்க சீன மூத்த அதிகாரி மறுத்துவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வீரர்களை எதிர்கொள்ளும் பயத்தில், சீன இராணுவத்தினர் இரவில் விழித்திருக்ககின்றனர்.
ALSO READ | 1962 போரில் லடாக் ரெசாங் லாவின் வீர வரலாறு தெரியுமா..!!!
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, ஆர்ம்ஸ் அண்ட் த மேன் என்ற நாடகத்தில், உணர்வுபூர்வமாக அல்லாமல் வெறும் ஊதியத்திற்காக இராணுவத்தில் சேர்ந்து, தோட்டாக்களை எதிர்கொள்ள பயப்படுகிற வீரர்களைப் பற்றி எழுதினார். இராணுவத்தில் சேர்ந்த அத்தகைய வீரர்களை 'சாக்லேட் வீரர்கள்' என்று அவர் அழைத்தார். சீன வீரர்கள் ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் இந்த கோட்பாட்டில் சிறப்பாக பொருந்துகிறார்கள். சண்டையினால் ஏற்படும் வெப்பத்தில் சாக்லேட் நிச்சயமாக உருகும். சீன படை ஜென்ரல்களுக்கு இந்த யதார்த்தம் தெரியும். 1993 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் எல்லையில் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நிலையில், அதை மீறியதன் மூலம் சீனா இந்தியாவின் நம்பிக்கையைத் இழந்ததோடு, இந்தியாவை சீண்டி பார்க்க நினைக்கிறது.
இந்திய (India) வீரர்கள், வாழ்க்கையின் சிரமங்களை எதிர் கொள்வதில் திறமையானவர்கள். அதோடு மலைகள், பாலைவனங்கள், காடுகள் மற்றும் கெரில்லா போர் கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். எந்தவொரு சூழ்நிலையையும் கடந்து செல்ல அவர்களுக்கு தைரியமும் நம்பிக்கையும் உள்ளது. மேலும் போரின் போது எதிரிகளை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, சீன படையினர் ராணுவத்தில் சேருவதற்கு முன்பு வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் பொருளாதார ரீதியில் வசதியான, நகர்ப்புறங்களில் வாழும் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். இத்தகைய ஆண்கள் போர்களை எதிர்த்துப் போராடுவதற்கும் லாயக்கானவர்களாக இருப்பதில்லை.
ALSO READ | கல்வான் தாக்குதல்: 60 சீன படையினர் கொல்லப்பட்டது அம்பலம்..!!!
சீனாவில் ( China) வசதியான குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள், வேறு வேலை இல்லை என்றால், ஒரு 5 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்து விட்டு வந்தால், பல சலுகைகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சேருகிறார்கள். இவர்களுக்கு சேவை மனப்பான்மை என்பது அறவே இல்லை எனக் கூறலாம்.
இந்திய படை வீரர்களுக்கு தேச பக்தி என்பது நாடி நரம்புகளில் பாயும் ஒரு உணர்வு. அவர்கள் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்யவும் அஞ்சுவதில்லை.
இது தான் இந்தியாவின் யானை பலம். மன உறுதி இல்லாத சாக்லேட் வீரர்கள் ட்ராகனின் பலவீனம்.
ALSO READ | எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. கடும் குளிர் காலத்திற்கு தயாராகும் துருப்புகள்..!!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR