சந்திரசேகர ராவ் vs சந்திரபாபு நாயுடு; சூடுபிடிக்கும் பொதுத்தேர்தல் 2019!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார்!

Last Updated : Dec 24, 2018, 06:08 PM IST
சந்திரசேகர ராவ் vs சந்திரபாபு நாயுடு; சூடுபிடிக்கும் பொதுத்தேர்தல் 2019! title=

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் காங்கிரஸ் தலைமையிலான அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆர்வம் காட்டி வருகின்றார்.

மறுபுறம் பாஜக அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் 3-வது தலைமையினை நோக்கி தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் களமிறங்கியுள்ளார்.
 
இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

இந்நிலையில், நேற்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று மேற்கு வங்காளம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தங்களது நிலைபாட்டில் உறுதியா இருப்பதாவும், விரைவில் முழுத்திட்டத்துடன் அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்தார்.

மம்தா பானர்ஜியுடனான சந்திப்பிற்கு பின்னர் ராவ் விரைவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.

Trending News