தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம் ராமயம்பேட்டையில் கங்கம் சந்தோஷ் (40) மற்றும் அவரது தாய் பத்மா (65) வசித்து வந்தனர்.
இந்நிலையில், தெலுங்கானாவில் ஆட்சியில் இருக்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த ராமயம்பேட்டை நகராட்சி தலைவர் ஜித்தேந்தர் கவுடிடம் கடன் பெற்று, கங்கம் சந்தோஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
சில நாளில் ஜித்தேந்தர் கவுடு தனக்கு 50% லாப பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பின்னர் இதன் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக நகராட்சி தலைவரும் அவரது ஆதரவாலர்களும், கங்கம் சந்தோஷையும் அவரது தாய் பத்மாவையும் துன்புறுத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | விரைவில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம்?
இதனை பொருத்துக்கொள்ள முடியாமல் கங்கம் சந்தோஷும் அவரது தாய் பத்மாவும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்காக ஏப்ரல் 16, சனிக்கிழமை அன்று காமரெட்டி நகரில் உள்ள ஒரு லாட்ஜில் இருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.
பின்னர், சந்தோஷ் மற்றும் அவரது தாயார், செல்ஃபி வீடியோ எடுத்தும், 6 பக்க வாக்குமூல கடிதம் எழுதியும் உள்ளனர். அவற்றை கங்கம் சந்தோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதையறிந்த லாட்ஜ் ஊழியர்கள், பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், பேஸ்புக்கில் சந்தோஷ் வெளியிட்ட ஆறு பக்க தற்கொலைக் குறிப்பு மற்றும் செல்ஃபி வீடியோவில், ராமயம்பேட்டை நகராட்சித் தலைவர் ஜிதேந்தர் கவுடு, அவரது ஆதரவாலர்கள் மற்றும் காவல்துறையின் துன்புறுத்தலால் தாங்கள் தற்கொலை செய்து கொண்டதாக பதிவிட்டுள்ளனர்.
குறிப்பாக அந்த செல்ஃபி வீடியோவில், தங்களது தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று கூறி ஏழு பேரின் புகைப்படங்களை சந்தோஷ் காட்டினார்.
மேலும், இவர்கள் மீது போலீசில் புகார் அளித்தும், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை (டிஆர்எஸ்) சேர்ந்தவர்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதில் தெரிவித்தார். மேலும், அவர்கள் இறந்த பின்னராவது நீதி கிடைக்கும் என்று நம்புவதாக அப்பதிவில் கூறியுள்ளார்.
இதையடுத்து சந்தோஷ், பத்மா ஆகியோரின் உடல்களுடன் நகராட்சி தலைவர் ஜிதேந்தர் கவுடு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு, ஜிதேந்தர் கவுட் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.
ஆனால் நகராட்சி தலைவர் ஏற்கனவே தனது வீட்டை பூட்டிவிட்டு தூர தேசம் சென்று தலைமறைவாகிவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | ராக்கி பாய்யா இது? புதிய கெட்டப்பில் மாஸ் காட்டும் யாஷ்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!