Cyber Fraud Helpline:இணைய மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதனால் ஏற்படும் நிதி இழப்பைத் தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய ஹெல்ப்லைன் எண் 155260 மற்றும் அதற்கான புகார்களை அளிக்கும் பிரத்யேக தளத்தை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஹெல்ப்லைன் மற்றும் இதற்கான பிரத்யேக புகார் அளிக்கும் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை இழப்பதை தடுக்க முடியும். மக்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பை வழங்க உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தலைமையில் இந்த ஹெல்ப்லைன் மற்றும் புகார் அளிக்கும் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
ஹெல்ப்லைன் ஏப்ரல் 1, 2021 அன்று பரிசோதனை ரீதியில் தொடங்கப்பட்டது. ஹெல்ப்லைன் 155260 மற்றும் அதன் புகார் அளிக்கும் தளம் இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி), அனைத்து முக்கிய வங்கிகள், பேமெண்ட் பேங்குகள், வாலெட் மற்றும் ஆன்லைன் வணிகர்கள் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, சத்தீஸ்கர், டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ALSO READ | Jio Vs Vi Vs Airtel: 4G வேகத்தில் யார் பெஸ்ட்; TRAI கூறுவது என்ன
இந்த ஹெல்ப்லைன் எண்ணில் புகார்களின் அடிப்படையில், 2 மாதங்களுக்குள் ரூ .1.85 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக பதிவாகியுஇள்ளது. இதில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு பணம் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர, டெல்லி மற்றும் ராஜஸ்தானில் நடந்த விசாரணையின் போது, பல கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ .58 லட்சம் மற்றும் ரூ .53 லட்சம் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில இடங்களில் பரிசோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த இரண்டு மாத காலத்திற்குள், ரூ.1.85 கோடிக்கும் அதிகமான மோசடி தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பு காவல்துறை மற்றும் வங்கி இருவருக்கும் வலு சேர்ப்பதாக உள்ளது. இரு துறையினரும், மோசடி தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் காரணமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இணைய மோசடியில் பாதிக்கப்பட்டவர் மாநில காவல்துறையினரால் இயக்கப்படும் ஹெல்ப்லைன் எண் 155260 ஐ அழைக்க வேண்டும். போலீஸ் ஆபரேட்டர் மோசடி பரிவர்த்தனை விவரங்களையும் அழைப்பவரின் தனிப்பட்ட விவரங்களையும் உடனே சைபர் மோசடி குறித்த விபரங்களை டிக்கெட் வடிவில் சைபர் மோசடி பிரிவுக்கு அனுப்புவார். அது குறித்த விபரங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது வாலெட் நிறுவனத்திற்கு அனுப்பபப்ட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஹெல்ப்லைன் எண்ணைத் தவிர, https: //cybercrime.gov.i/ என்ற வலைத்தளத்திலும் ஆன்லைன் மோசடி தொடர்பான புகாரையும் செய்யலாம். உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு சைபர் போர்ட்டல் https: //cybercrime.gov.i/ என்ற தளத்தை தொடங்கியது. முதலில் தில்லியில் தொடங்கபப்ட்ட இந்த தளம், இப்போது ராஜ்ஸ்தானிலும் பயன்பாட்டில் உள்ளது.
ALSO READ | உலகத்தலைவர்களில் நம்பர்-1 இடத்தை பிடித்த பிரதமர் மோடி: Morning Consult
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR