Karnataka Election Result 2023: கர்நாடகாவில் கிடைத்த வெற்றியால் காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், யாருக்கு என்ன பதவி கிடைக்கும் என்ற அடுத்த கவலை வெற்றியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், தோல்வியால் பாரதிய ஜனதா கட்சி துவண்டு போயுள்ளது. இருந்தாலும், கர்நாடக மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
முதல்வர் பொம்மை கருத்து
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தோற்றாலும், மக்களவைத் தேர்தலில் மீண்டு வருவோம் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தோல்வியை ஏற்றுக்கொண்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியால் முத்திரை பதிக்கத் தவறிவிட்டதாகக் கூறினார்.
வாக்கு எண்ணிக்கையின் போக்குகளின்படி 113 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை நோக்கி காங்கிரஸ் முன்னேறிச் செல்லும் நேரத்தில், பாரதிய ஜனதா கட்சிதனது ஆட்சியை இழக்கிறது. தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் பாஜகவின் பிடியில் இருந்த கர்நாடகாவில் பாஜகவின் பிடி தளர்கிறது.
மேலும் படிக்க | மக்கள் வாக்களிக்காவிட்டால் என்ன? ஆட்சி அமைக்க முயற்சிக்கும் பாஜகவின் மாஸ்டர் பிளான்
அதேசமயம், இதுவரை பின்னடைவை சந்தித்து வந்த காங்கிரஸ், முழு வீச்சில் முன்னேறிவருகிறது. தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசிய வழக்கில், எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மீதான அதிருப்தி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சீரிய தலைமை என காங்கிரஸ் கட்சி தற்போது பலத்தை பெற்று வருகிறது.
பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா கருத்து
"பாஜகவுக்கு வெற்றி மற்றும் தோல்வி புதிதல்ல. இந்த முடிவுகளால் கட்சி தொண்டர்கள் பீதியடைய தேவையில்லை. கட்சியின் பின்னடைவு குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம். இந்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்" என்று பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா கூறினார்.
"Victory and defeat aren't new to BJP. Party workers need not be panicked by these results. We will introspect about the party's setback. I respectfully accept this verdict," says BJP leader BS Yediyurappa on the party's defeat in #KarnatakaElectionResults pic.twitter.com/LYudJZGIcL
— ANI (@ANI) May 13, 2023
மகக்ளவைத் தேர்தலில் மீண்டும் வருவேன்: பசவராஜ் பொம்மை
“பிரதமர் நரேந்திர மோடி, கட்சிக்காரர்கள் உட்பட அனைவரும் எவ்வளவோ முயற்சி செய்தும், எங்களால் தடம் பதிக்க முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு விரிவான ஆய்வு நடத்துவோம். இந்த முடிவுகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் கட்சியை சீரமைக்க முயற்சி செய்து மீண்டும் வலுவாக வருவேன்” என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Karnataka Elections Result: எந்த தொகுதியில் யார் வெற்றி? முழு விவரம்!
கர்நாடகாவில் காங்கிரஸ் 123 இடங்களில் முன்னிலை
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 224 தொகுதிகளுக்கும் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. மதியம் 1 மணி வரை காங்கிரஸ் கட்சி 123 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி 73 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) 22 இடங்களிலும், மற்ற கட்சிகள் 6 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. கர்நாடகாவில் 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 73.19 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினார்கள்.
மேலும் படிக்க | CM Of Karnataka: கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸின் புதிய ஃபார்முலா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ