மும்பையைச் சேர்ந்தவர் கவுரி பிதே(21) கட்டிடக்கலை மாணவி. இவர் கடந்த 16-ம் தேதி தனது நண்பருடன் காரில் செல்லும் போது நடைபாதையில் மோதியதால் அவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். அப்போது கவுரி போதையில் இருந்து உள்ளார். கவுரியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது அங்கு அவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். போலீஸ் அதிகாரிகளை அடித்து உதைத்து உள்ளார். அவர்களின் செல்போன்களை உடைத்துள்ளார். மேலும் கெட்ட வாரத்தைகளால் அனைவரையும் திட்டியுள்ளார். அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து உள்ளார். அவருடன் வந்த நண்பர் கவுரியை கட்டுபடுத்த முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை.
இந்த பெண்ணின் ரகளை போலீஸ் நிலையத்தில் 10 நிமிடம் நடந்து உள்ளது. பின்னர் கவுரி ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருகு மருத்துவ பரிசோதனை நடத்தபட்டது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

வீடியோ:-