கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2021 இன் நான்காவது கட்டத்தில் 44 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஏப்ரல் 10, 2021) காலை 7 மணிக்கு கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கி நடந்து வருகிறது.
மேற்கு வங்க தேர்தலில் பாதுகாப்பு பலமாக இருந்த நிலையிலும் வன்முறை வெடித்தது. கூச்ச்பெஹரின் சிதால்குச்சியில் மத்திய படை ஜவான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்தனர். சிஏபிஎஃப் ஜவான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது டிஎம்சி மற்றும் பாஜக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்த நான்கு பேரும் டி.எம்.சி தொண்டர்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கி சூடு குறித்து மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மேற்கு வங்கத்தில் (West Bengal) முதல் மூன்று கட்டங்களில், 91 தொகுதிகளில் தேர்தல்கள் நடந்தன. மார்ச் 27 ஆம் தேதி முதல் கட்டத்தில் 30 தொகுதிகளிலும், ஏப்ரல் 1 ஆம் தேதி இரண்டாம் கட்டத்தில் 30 தொகுதிகளிலும், ஏப்ரல் 6 ஆம் தேதி மூன்றாம் கட்டத்தில் 31 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இன்று நான்காவது கட்டத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 44 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடக்கின்றது.
நான்காவது கட்டத்தில் வாக்களிக்கப் போகும் தொகுதிகள் ஹவுரா (பகுதி II), தெற்கு 24 பர்கானாக்கள் (பகுதி III), ஹூக்லி (பகுதி II), அலிபுர்தார் மற்றும் கூச்ச்பெஹார் ஆகிய பகுதிகளில் உள்ளன. 44 தொகுதிகளில் 373 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, பாலிவுட் பாடகர் மற்றும் பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ, லாக்கெட் சாட்டர்ஜி, பேயல் சர்க்கார், முன்னாள் அமைச்சர் ராஜீப் பானர்ஜி ஆகியோர் அடங்குவர்.
இந்த கட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 2016 தேர்தலில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்ற பவானிபூர் தொகுதியில் பாஜக (BJP) வேட்பாளர் ருத்ரானில் கோஷ் போட்டியிடுகிறார். இன்று நடக்கும் வாக்குப்பதிவில் பல முக்கிய போட்டிகளைக் காணும் தொகுதிகள் உள்ளன. டோலிகஞ்ச் தொகுதியில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவும் டி.எம்.சி சார்பில் எம்.எல்.ஏ அரூப் பிஸ்வாசும் போட்டியிடுகின்றனர்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் டி.எம்.சி (TMC) வேட்பாளர் அரூப் பிஸ்வாஸுக்காக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் சிபிஐ (எம்) சார்பில் தேப்தூத் கோஷ் போட்டியில் உள்ளார்.
ALSO READ: பீதியைக் கிளப்பும் கோவிட் எண்ணிக்கை: 1.45 லட்சத்திற்கும் மேலானோர் புதிதாக பாதிப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR