தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா உட்பட நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பிரச்சாரத்தில் பேசும் பல தலைவர்கள் சர்ச்சைக்குரிய அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர். திரிணமுல் காங்கிரஸ் (TMC) தலைவர் ஷேக் ஆலம் (Sheikh Alam) தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியாவின் 30 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் ஒன்று கூடினால் 4 புதிய பாகிஸ்தானை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி மீது இஸ்லாமியர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் எனக் கூறிய அவர், 'நாங்கள் சிறுபான்மை மக்கள் 30 சதவீதம், அவர்கள் 70 சதவீதம். இந்தியா முழுவதும் 30 சதவீத மக்கள் ஒன்று கூடினால், நம்மால் 4 புதிய பாகிஸ்தானை உருவாக்க முடியும். அப்போது இந்த 70 சதவீத மக்கள் மீண்டும் எங்கே போவார்கள்? ' என அவர் பேசியுள்ளது. பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவின் அமித் மால்வியா, ஷேக் ஆலமின் வீடியோவைப் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டதுடன், 'திரிணமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஆலம் பிர்பூமில் உள்ள தொகுதியில் உரை நிகழ்த்தினார். அதில் அவர் 4 பாகிஸ்தானை உருவாக்கலாம் என்று கூறுகிறார். மம்தா பானர்ஜிக்கு அவர் விசுவாசமாக இருப்பது தெளிவாக உள்ளது. திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜீ அதை ஆதரிக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Y’day, TMC leader Sheikh Alam, giving a speech in Basa para, Nanoor, in Birbhum AC said, if 30% Muslims in India come together, then 4 Pakistan can be formed...
He obviously owes his allegiance to Mamata Banerjee... Does she endorse this position?
Do we want a Bengal like that? pic.twitter.com/YjAeSzhH5P
— Amit Malviya (@amitmalviya) March 25, 2021
ALSO READ | அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR