பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகுவது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட், மக்களுக்கான பட்ஜெட் என்று ஆளும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் கூறி வருகின்றனர்.
'Whatever CM decides we will stand by it, but we are not happy with the BJP budget, not happy with the budget allotted to AP,' TDP MP P. Ravindra Babu, on being asked about alliance with BJP he said, 'that we have to see, our CM will decide, we will follow him.' pic.twitter.com/sUFTIejrjQ
— ANI (@ANI) February 4, 2018
இதை தொடர்ந்து, பட்ஜெட்டில் ஆந்திர வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கப்படவில்லை என ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்
இந்நிலையில், அமராவதியில் தெலுங்கு தேச எம்.பி.க்கள் பாராளுமன்ற வாரியத்தின் கூட்டம் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு உரிய நிதி வழங்கப்படாததால் பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Andhra Pradesh: Inside visuals of TDP Parliamentary Board meeting underway in Amravati. pic.twitter.com/vYDCkl92HY
— ANI (@ANI) February 4, 2018