"மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசினால்.. சேர்க்கை ரத்து செய்யப்படும்" உத்தரவு போட்ட கல்லூரி

Bihar News: மாணவ - மாணவிகள் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசினால் கல்லூரி சேர்க்கை ரத்து செய்யப்படும் என்று பீகாரின் இஸ்லாமியா கல்லூரியின் உத்தரவு.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 5, 2023, 04:00 PM IST
"மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசினால்.. சேர்க்கை ரத்து செய்யப்படும்" உத்தரவு போட்ட கல்லூரி title=

பீகார் செய்திகள்: இசட் ஏ இஸ்லாமியா கல்லூரியின் (ZA Islamia PG College) முதல்வர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அந்த உத்தரவு கல்லூரியில் படிக்கும் மாணவ - மாணவிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி வளாகத்திலோ, வகுப்பு அறையிலோ மாணவ - மாணவிகள் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசி கேலி செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை பார்த்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது அவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் ட்ரோல்

இசட் ஏ இஸ்லாமியா முதுநிலை கல்லூரியின் முதல்வர் இட்ரிஸ் ஆலத்தின் இந்த அறிவிப்பு கடிதம் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். இன்று நாடு நிலவுக்கு ஏவுகணையை அனுப்பி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு பையனையும் பெண்ணையும் இவ்வாறு வேறுபடுத்துவது? மாணவ - மாணவிகள் ஒன்றாக அமர்ந்து படிக்கவும் எழுதவும் முடியாதா? எனக் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாணவ - மாணவிகள் சிரித்து பேசினால் தகுதி நீக்கம் - கல்லூரி அதிரடி

கல்லூரியின் முதல்வர் இட்ரிஸ் ஆலம் வெளியிட்ட அந்த நோட்டீஸில், "கல்லூரி வளாகத்தில் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் ஒன்றாக (அருகில் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டு) காணப்பட்டால், அவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பிரிவு 29 மற்றும் 30ன் கீழ் நிறுவப்பட்ட சிறுபான்மைக் கல்லூரி என்பதைத் தெரியப்படுத்துகிறேன். இந்த கல்லூரியின் முழு நிர்வாகத்திற்கான அதிகாரமும் ஆளும் குழுவிடம் உள்ளது" எனக் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் படிக்க - சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் விரும்புகிறதா? சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மோடி

மாணவர்களை பயமுறுத்தவே நோட்டிஸ் -கல்லூரி முதல்வர்

இதுகுறித்து இசட் ஏ இஸ்லாமியா கல்லூரி முதல்வர் கூறுகையில், "கல்லூரி வளாகத்திற்குள் சில மோசமான குருப் வருகின்றன. அவர்களை பற்றி தெரியாமல், அவர்களுடன் பேசி சிரித்து அவர்களை ஆதரிக்கும் சில பெண்கள் இருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில், இதுபோன்ற கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது. அதேன்றத்தில், இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பிரிவுகள் 29 மற்றும் 30, தவறுதலாக அவசரப்பட்டு குறிப்பிடப்பட்டது. இந்த கடிதத்தின் நோக்கமே மாணவர்களை பயமுறுத்த மட்டுமே வெளியிடப்பட்டது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார். 

ZA Islamia College

கல்லூரி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை

இங்கு இஸ்லாமியா முதுநிலை கல்லூரி சிறுபான்மையினர் என்ற பெயரில் இப்படி ஒரு கடிதத்தை வெளியிட்டு அதில் மைனாரிட்டி என்ற வார்த்தையை பயன்படுத்தி என்ன சொல்ல விரும்புகிறார் கல்லூரி முதல்வர்? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க - தோசைக்கு சட்னி கொடுக்க மாட்டியா" சப்ளையரின் மூக்கை கடித்த வாலிபர்!

காதலனுக்காக வீதியில் சண்டை போட்ட மாணவிகள்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இசட் ஏ இஸ்லாமியா முதுநிலை கல்லூரிக்கு வெளியே மூன்று நான்கு மாணவிகளுக்கு இடையே தங்கள் காதலன் தொடர்பாக சண்டை போட்டுள்ளனர். சாலையில் மாணவிகள்  ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.வைரலாக பரவியது. இந்த சம்பவத்தை அடுத்து கல்லூரி முதல்வர் உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பிரிவு 29 மற்றும் 30 என்ன சொல்கிறது?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 29வது பிரிவு சிறுபான்மையினரின் நலன்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. அதேசமயம் பிரிவு 30 சிறுபான்மையினருக்கு கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் உரிமை அளிக்கிறது.

மேலும் படிக்க - பாஜக எம்பி மேனகா காந்திக்கு 100 கோடி ரூபாய் அவதூறு நோட்டீஸ் அனுப்பிய இஸ்கான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News