Central Government DA News: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி இன்று வந்துவிட்டது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படியில் இருந்த முடக்கத்தை இன்று மோடி அரசு நீக்கியது. இதனுடன், ஊழியர்களின் டி.ஏ. 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
7 வது ஊதியக்குழுவின் கீழ், இப்போது அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 28 சதவீத வீதத்தில் டிஏ மற்றும் டிஆர் வழங்கப்படும். செப்டம்பர் மாதத்தில் இது ஊழியர்களுக்கு செலுத்தப்படும். செப்டம்பர் மாத சம்பளத்தில் டிஏ 28 சதவீத அளவில் செலுத்தப்படும். மேலும் ஜூலை மற்றும் ஆக்ஸ்ட் என இரண்டு மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். இப்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் (Basic Pay) மற்றும் கிரேடுக்கு ஏற்ப சம்பள உயர்வு குறித்த ஒரு கணக்கீட்டை செய்ய முடியும்.
இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது
மொத்தம் அகவிலைப்படியின் மூன்று தவணை அளிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், இது எந்த விதத்தில் வழங்கப்படும் என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். அகவிலைப்படி (DA Hike) 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அடிப்படை சம்பளத்தில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒரு ஊழியரின் சம்பளம் ரூ .20,000 என்றால், 11 சதவீதத்தின்படி, அவரது சம்பளம் ஒரு மாதத்தில் ரூ .2200 அதிகரிக்கும்.
சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும், கணக்கீட்டைப் புரிந்து கொள்ளுங்கள்
7 வது ஊதிய மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு பணிகளில் பணிபுரியும் அதிகாரிகளின் ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு (Salary Hike) இருக்கும்.
ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, 28% டி.ஏ-வுக்கு ஒப்புதல்
ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். EPFO-ல் பணிபுரிந்து ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ஏ.கே.சுக்லாவின் அடிப்படை சம்பளம் தற்போது ரூ .31550. இதன் அடிப்படையில் கணக்கீடு செய்தால்....
- அடிப்படை ஊதியம் (BasicPay)- ரூ 31550
- மொத்த அகவிலைப்படி (DA)- 28% - மாதத்திற்கு ரூ .8834
- இதுவரை செலுத்தப்பட்ட அகவிலைப்படி (DA)- 17% - ரூ 5364
- அஅகவிலைப்படி (DA) 11% அதிகரித்த பிறகு - ரூ. 3490 (ஒவ்வொரு மாதமும்) அதிகமாக வரும்.
- வருடாந்திர அகவிலைப்படி )கொடுப்பனவு - 11 சதவீத உயர்வுக்குப் பிறகு ரூ .1,06,008 (மொத்தம் 28 சதவீதம்)
- வருடாந்திர அகவிலைப்படி அதிகரிப்பு - ரூ. 41880 (11 சதவீதம் உயர்வுக்குப் பிறகு)
அகவிலைப்படி இன்னும் 3 சதவீதம் அதிகரிக்கும்
ஜூன் 2021 க்கான அகவிலைப்படி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2021 ஜனவரி முதல் மே வரையிலான ஏ.ஐ.சி.பி.ஐ தரவுகளிலிருந்து 3 சதவீதமாக அகவிலைப்படி அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. இது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்று ஜேசிஎம் செயலாளர் (பணியாளர்கள் பக்கம்) சிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஜூலை மாத அகவிலைப்படி எப்போது செலுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், மேலும் 3 சதவீதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும். இதற்குப் பிறகு ஊழியர்களின் ஊதியம் மீண்டும் ஒரு முறை அதிகரிக்கும் என்பது உறுதி.
ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR