8th Pay Commission மெகா அப்டேட்: விரைவில் வருகிறது 44% ஊதிய உயர்வு!!

8th Pay Commission: ஊழியர்களின் ஃபிட்மென்ட் பாக்டரை அரசு 3.68 சதவீதமாக உயர்த்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 18, 2023, 05:53 PM IST
  • 8வது சம்பள கமிஷன்: எப்போது அமல்படுத்தப்படும்?
  • முந்தைய ஊதியக் குழுவின் அடிப்படையில் 8வது ஊதியக் குழு கணக்கீடு.
  • 8வது சம்பள கமிஷனில் குறைந்தபட்ச சம்பளம் என்னவாக இருக்கும்?
8th Pay Commission மெகா அப்டேட்: விரைவில் வருகிறது 44% ஊதிய உயர்வு!! title=

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அமலில் உள்ள ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அடுத்த அதாவது 8வது ஊதியக் குழு அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாற்றப்படும். இந்த பதிவில், ஃபிட்மெண்ட் ஃபேக்டர் அடிப்படையில் ஊதியத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பது பற்றியும், குறைந்தபட்ச சம்பளம் என்னவாக இருக்கும் என்பது பற்றியும் காணலாம். 

அகவிலைப்படி அதிகரிப்பு

தற்போது மத்திய ஊழியர்களுக்கு அரசு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஜனவரி 2023க்கு, அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படுகிறது. அடுத்த முறை ஜூலை 2023 இல், ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி அதிகரிக்கப்படும். இது ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படும்.

CPI-IW புள்ளிவிவரங்கள்

ஜூலை முதல் செயல்படுத்தப்படும் அகவிலைப்படி CPI-IW புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இருக்கும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் புள்ளிவிவரங்கள் வந்துள்ளன. மற்ற மாதங்களின் புள்ளிவிவரங்களும் வந்தவுடன் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் இந்த அறிவிப்பு வெளியிடப்படக்கூடும். எனினும், அடுத்த அகவிலைப்படி உயர்வும் குறைந்தபட்சம் 4 சதவிகிதம் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். 

முந்தைய ஊதியக் குழுவின் அடிப்படையில் 8வது ஊதியக் குழு கணக்கீடு

8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும். மக்களவைத் தேர்தலுக்கு பின், சம்பள கமிஷன் அமைப்பு குறித்த விவாதம் தொடங்கும் என்று கூறப்படுகின்றது. இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் நாடாளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டிருந்தார். 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகு, மத்திய ஊழியர்களின் சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்படும். 

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு இரட்டை நற்செய்தி: டிஏ ஹைக்குடன் இதுவும் கிடைக்கும்

8வது சம்பள கமிஷன்: எப்போது அமல்படுத்தப்படும்?

எட்டாவது ஊதியக் குழு 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உருவாக்கப்படும். அதன் பின்னர் 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் இது அமலுக்கு வரக்கூடும். அதாவது, இது 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் இது நடைமுறைக்கு வரலாம். 8-வது ஊதியக் குழுவுடன் ஒப்பிடும்போது 8-வது ஊதியக் குழுவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படாமல், மற்ற ஃபார்முலாக்களின் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்.

ஊதியம் எப்போது, ​​எவ்வளவு அதிகரித்தது?

- 4வது ஊதியக் குழுவில் 27.6 சதவீதம் ஊதிய உயர்வு இருந்தது. இதில், குறைந்தபட்ச சம்பளம் ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

- 5வது ஊதியக் குழுவில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தில் 31 சதவீத ஏற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.2550 ஆனது.

- 6வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் ககொண்டு, 1.86 மடங்கு உயர்வு ஏற்பட்டது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 54% அதிகரித்து, அடிப்படை சம்பளம் ₹ 7000 ஆக உயர்ந்தது.

- ஏழாவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் 2.57 மடங்கு உயர்வு ஏற்பட்டது. அதன் பிறகு அடிப்படைச் சம்பளம் ரூ. 18,000 ஆனது. 

8வது சம்பள கமிஷனில் குறைந்தபட்ச சம்பளம் என்னவாக இருக்கும்?

தற்போது 7வது ஊதியக் குழு அமலில் உள்ளது. அதில் பணியாளர்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் 2.57 மடங்கு உயர்வு பெற்றுள்ளனர். இதற்குப் பிறகு, 8-வது ஊதியக் குழுவிலும் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் அனைத்தும் உருவாக்கப்படலாம். இதன் அடிப்படையில் ஊழியர்களின் ஃபிட்மென்ட் பாக்டரை அரசு 3.68 சதவீதமாக உயர்த்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கலாம். ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 26,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: 3% டிஏ உயர்வுடன் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News