ஹோலி பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியையும் கேளிக்கைக்கான மனநிலையையும் அளிக்கும் ஒரு பண்டிகை ஆகும். வட மாநிலங்களில் இது மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. ஹோலிக்கு முந்தைய நாள் ஹோலிகா தஹன் என்ற நிகழ்வு நடத்தப்படுகின்றது.
இந்த ஆண்டு, ஹோலிகா தஹன் மார்ச் 17, 2022 அன்று கொண்டாடப்படும். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அடுத்த நாள், அதாவது மார்ச் 18 அன்று கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஹோலி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு ஹோலி அன்று மிகவும் அரிதான கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இருப்பினும், ஹோலிகா தஹனம் நடக்கும் மாலைப் பொழுதில் பத்ரா தோஷமும் இருக்கும். ஆகையால், இந்த ஆண்டு ஹோலிகா தஹனத்தின் போது நடக்கும் தீ மூட்டும் நிகழ்வு மாலைக்கு பதில் இரவு நடக்கும்.
3 ராஜயோகங்கள் உண்டாகின்றன
மார்ச் 17-ம் தேதி ஹோலிகா தஹன் நாளில், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை 3 ராஜயோகங்களை உருவாக்கும் வகையில் இருக்கும். இந்நாளில் கஜகேசரி யோகம், வரிஷ்ட யோகம், கேதார யோகம் ஆகியவை உருவாகின்றன. ஜோதிடர்களின் படி, ஹோலியில் இதுபோன்ற ஒரு நல்ல கிரக சேர்க்கை இதற்கு முன்னர் அமைந்ததில்லை. அத்தகைய மங்களகரமான யோகத்தில் ஹோலிகா தஹனம் இருப்பது நாட்டிற்கு மிகவும் நன்மை பயக்கும் என கூறப்படுகின்றது.
மேலும் படிக்க | இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி பிரகாசமாகும்
இதன் விளைவு என்னவாக இருக்கும்
3 ராஜயோகங்களின் உருவாக்கம் கௌரவம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் செழிப்பு, முன்னேற்றம் மற்றும் வைபவத்தை அளிக்கும். ஹோலிகா தகனம் வியாழனன்று வருவதும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இதனுடன், சூரியனும் குருவின் ராசியான மீனத்தில் இருப்பார். மொத்தத்தில், கிரகங்களின் இத்தகைய சுப நிலை நோய்கள், துக்கங்கள் மற்றும் தொல்லைகளை அழிக்கும். இதனுடன், எதிரிகளின் மீது வெற்றியையும் கொண்டு வரும்.
ராஜயோகங்களின் இந்த அரிய சேர்க்கையில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த கிரக யோகம் ஹோலி முதல் தீபாவளி வரை முன்னேற்றத்துக்கான சூழலை இருக்கச்செய்யும். இந்த நேரம் தொழிலதிபர்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால், நாட்டின் அரசாங்க கருவூலத்திற்கும் பலன் கிடைக்கும்.
வரி வசூல் அதிகரிக்கலாம். வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கக்கூடும். சர்வதேச அளவில் இருக்கும் மந்தநிலையும் முடிவுக்கு வரும்.
கொரோனா நோய்த்தொற்று தொடர்பான நல்ல செய்தியும் உள்ளது. இந்த சுபமான கிரக நிலைகள் நாட்டில் நோய்த்தொற்றைக் குறைக்கும். மேலும் புதிய நோய் எதுவும் உருவாக வாய்ப்பில்லை. இது தவிர, பணவீக்கத்தில் இருந்து சாமானியர்களுக்கு இந்தச் சூழல் ஓரளவு நிவாரணம் அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இன்று பிரதோஷம், சிவனின் அருளால் இவர்களுக்கு நினைத்ததெல்லாம் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR