Indian Railways முக்கிய அப்டேட்: ரயிலில் இதையெல்லாம் செய்தால் தண்டனை... ஜாக்கிரதை!!

Indian Railways: ரயிலில் பயணம் செய்யும் போது தவிர்க்க வேண்டிய 4 முக்கிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2023, 12:25 PM IST
  • ரயில் மேல் அமர்ந்து பயணம் செய்ய வேண்டாம்.
  • தேவையில்லாமல் அலாரம் செயினை இழுக்க வேண்டாம்.
  • ரயிலில் பேனர், போஸ்டர் ஒட்ட வேண்டாம்.
Indian Railways முக்கிய அப்டேட்: ரயிலில் இதையெல்லாம் செய்தால் தண்டனை... ஜாக்கிரதை!!  title=

இந்தியன் ரயில்வே விதிகள் மற்றும் தண்டனைகள்: மக்கள் தொகை அதிகமாக உள்ள நமது நாட்டில் ரயிலில் பயணம் செய்வது இன்றும் பாதுகாப்பானதாகவும் மலிவானதாகவும் கருதப்படுகிறது. ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து உங்கள் இலக்கை நோக்கி எளிதாகப் பயணம் செய்யலாம். ரயில் பயணம் எப்போதுமே பயணிகள் அனுவிக்கும் ஒரு பயணமாக இருந்து வருகிறது. அதுவும், நீங்கள் நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டால், பல வித காட்சிகளை கண்டு களிக்கலாம். 

இந்திய இரயில்வே இந்தியாவை இணைக்கும் ஒரு மிக முக்கியமான போக்குவரத்து அம்சமாக இருந்து வருகின்றது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல்வெறு ரயில்களில் பயணிக்கிறார்கள். மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில், ரயில் போக்குவரத்துக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. ரயில்வே துறை மூலம் தினமும் சுமார் 10,000 ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதில் மூத்த குடிமக்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

ரயில் பயணம் மகிழ்ச்சியானதாக, நிம்மதி அளிக்கக்கூடியதாக இருந்தாலும் அதில் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களும் உள்ளன. இவற்றை பற்றிய புரிதல் அனைத்து பயணிகளுக்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால், கடுமையான அபராதத்துடன் சிறைத் தண்டனையையும் சந்திக்க வேண்டியிருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும் போது தவிர்க்க வேண்டிய 4 முக்கிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரயில் பயணத்தில் தவறுதலாக கூட இவற்றை செய்யாதீர்கள்:

ரயில் மேல் அமர்ந்து பயணம் செய்ய வேண்டாம்

ரயிலில் பயணம் செய்யும் போது, ​​தவறுதலாக கூட அதன் மேல் கூரையில் பயணம் செய்ய முயற்சிக்காதீர்கள். இப்படி செய்தால், ரயில்வே சட்டம் (இந்திய ரயில்வே விதிகள் மற்றும் தண்டனை) பிரிவு 156-ன் கீழ் உங்களுக்கு ரூ.500 அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். குற்றம் பெரியதாக இருந்தால், இரண்டு தண்டனைகளும் சேர்ந்து வழங்கப்படலாம். 

தேவையில்லாமல் அலாரம் செயினை இழுக்க வேண்டாம்

நியாயமான காரணமின்றி ஓடும் ரயிலில் அலாரம் செயினை இழுப்பது சட்டவிரோதமானது. ரயில்வே சட்டம் (இந்திய ரயில்வே விதிகள் மற்றும் தண்டனை) பிரிவு-141ன் கீழ், இதற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம். குற்றம் பெரிதாக இருந்தால், குற்றம் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் இரண்டு தண்டனைகளையும் ஒன்றாகவும் அளிக்கலாம். 

மேலும் படிக்க | விரைவில் தண்டவாளங்களில் ஹைட்ரஜன் ரயில்... ரயில்வே அமைச்சகம் அளித்த முக்கிய தகவல்!

ரயிலில் பேனர், போஸ்டர் ஒட்ட வேண்டாம்

ரயிலில் எந்த வகையான போஸ்டர், துண்டு பிரசுரம் அல்லது பேனர் வைப்பது ரயில்வே சட்டத்தின் (இந்திய ரயில்வே விதிகள் மற்றும் தண்டனை) பிரிவு 166ன் கீழ் குற்றமாகும். அவ்வாறு செய்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாஜிஸ்திரேட் விரும்பினால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரண்டு தண்டனைகளையும் வழங்கலாம்.

குப்பை போட்டால் சிறை

ரயிலில் எந்த வகையான குப்பையை வீசுவதும் சட்டவிரோதமானது. ரயில்வே சட்டம் (இந்திய ரயில்வே விதிகள் மற்றும் தண்டனை) பிரிவு 145ன் கீழ், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்த குற்றத்திற்கு ரூ.100 அல்லது ரூ.250 அபராதம் விதிக்கப்படலாம்.

பல விதிகள் உள்ளன

ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க | ரயிலா இல்லை... 5 ஸ்டார் ஹோட்டலா... இந்திய ரயில்வேயின் ‘சில’ ஆடம்பர ரயில்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News