8th Pay Commission அட்டகாசமான அப்டேட்: 44% ஊதிய உயர்வு விரைவில்

8th Pay Commission: ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் அதிகரித்து, அவர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 26,000 ஆக உயரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 9, 2023, 10:17 AM IST
  • 8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்?
  • சம்பளம் எவ்வளவு உயரும்?
  • 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது.
8th Pay Commission அட்டகாசமான அப்டேட்: 44% ஊதிய உயர்வு விரைவில் title=

8வது சம்பள கமிஷன், சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல வித நல்ல செய்திகள் கிடைத்து வருகின்றன. தற்போது மீண்டும் ஒரு நல்ல செய்தி ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ளது. நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த ஊதிய கமிஷம் பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து தற்போது ஒரு புதுப்பிப்பு வந்துள்ளது. 

விரைவில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல ஏற்றம் இருக்கப்போகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதியம் மற்றும் பிற கொடுப்பனவுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இப்போது அரசாங்கம் விரைவில் எட்டாவது ஊதியக் குழுவைக் கொண்டு வர உள்ளது. இது ஊழியர்களின் சம்பளம் மற்றும் அகவிலைப்படியை (DA) அதிகரிக்கப் போகிறது. எட்டாவது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தினால், ஓய்வூதியதாரர்களுக்கும் அதன் பலன்கள் வழங்கப்படும்.

8வது ஊதியக் குழு: 

ஏழாவது ஊதியக் குழுவை ரத்து செய்து புதிய ஊதியக் கொள்கையை கொண்டு வர அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய முறையில் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாது. அடுத்த ஆண்டு ஊழியர்களின் சம்பளம் 44% வரை அதிகரிக்கலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.... ஜூலையில் பம்பர் டிஏ உயர்வு உறுதி!!

சம்பளம் எவ்வளவு உயரும்?

ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசு ஒரு முடிவை எடுத்தால், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது. தற்போது, ​​ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக உள்ளது. அதன் அடிப்படையில் அடிப்படை சம்பளம் ரூ.18,000 வழங்கப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 8,000 அதிகரித்து, அவர்களின் மொத்த சம்பளம் ரூ. 26,000 ஆக உயரும். 

8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்?

8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது குறித்து அரசு இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அடுத்த ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஊழியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எட்டாவது ஊதியக் குழுவை அரசு அமைக்கலாம் என்று கூறப்படுகின்றது. அப்படி 2024 ஆம் ஆண்டில் 8 ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், 2026 ஆம் ஆண்டில் அது அமல்படுத்தலாம் என்றும் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த முடிவை அரசு எடுத்தால், ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் அதிகரித்து, அவர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 26,000 ஆக அதிகரிக்கும்.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது

2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது ஊழியர்களின் அதிர்ஷ்டம் மீண்டும் ஜொலிக்கப் போகிறது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊதியக்குழுக்கள்

1947 முதல் பல ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கிறது. இந்த ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் 2 ஜாக்பாட் செய்திகள் கிடைக்கும், காத்திருக்கும் ஊழியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News