இந்திய ரயில்வே: இந்திய இரயில்வே இந்தியாவை இணைக்கும் ஒரு மிக முக்கியமான போக்குவரத்து அம்சமாக இருந்து வருகின்றது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல்வெறு ரயில்களில் பயணிக்கிறார்கள். மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில், ரயில் போக்குவரத்துக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. ரயில்வே துறை மூலம் தினமும் சுமார் 10,000 ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதில் மூத்த குடிமக்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பயணிகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பல சிறப்பு வசதிகள் கிடைக்கும். ரயில்வே தரப்பில் இருந்து தகவல் அளிக்கையில், ஒவ்வொரு நாளும் சுமார் 10,000 ரயில்கள் ரயில்வே துறை மூலம் இயக்கப்படுவதாகவும், அதில் மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘மூத்த குடிமக்களுக்கு ரயிலில் உறுதி செய்யப்பட்ட கீழ் பெர்த் வசதி கிடைக்கிறது. ரயில்வேயில் இதற்கென தனி ஏற்பாடு உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகள் கீழ் பெர்த்திற்கு எந்த விருப்பத்தையும் தனியாக தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணிகளுக்கு தானாக ரயில்வே தரப்பிலிருந்து கீழ் பெர்த் கிடைக்கும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்
ரயில்வேயில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஸ்லீப்பர் பிரிவில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 6 கீழ் பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனுடன், 3 ஆம் வகுப்பு ஏசியில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு முதல் ஐந்து கீழ் பெர்த்களும், 2 ஆம் வகுப்பு ஏசியில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று முதல் நான்கு கீழ் பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தவிர, ரயிலில் ஏதேனும் கீழ் பெர்த்கள் காலியாக இருந்தால், புக் செய்யும் போது மேல் பர்த் கிடைத்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, ரயிலில் டிக்கெட் செக் செய்யும் டிடி கீழ் பர்துகளை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதகவும் ரயில்வே அமைச்சர் கூறினார்.
59 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்பட்டது
2019-20 ஆம் ஆண்டில், அரசாங்கம் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு 59,837 கோடி ரூபாய் மானியம் வழங்கியது. ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படுகிறது. இது தவிர, மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் என பல பிரிவுகளில் ரயில்வே மானியம் வழங்குகிறது.
முன்னர் யாருக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைத்தது?
ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முன்பு ரயில்வே 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு கட்டணத்தில் 40% தள்ளுபடி வழங்கப்பட்டது. மறுபுறம், பெண்களுக்கு வழங்கப்பட்ட விலக்கு பற்றி பேசினால், இவர்களுக்கு 58 வயது முதல் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டது. மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி உள்ளிட்ட அனைத்து வகை ரயில்களிலும் இந்த தள்ளுபடி வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | பயணிகளுக்கு ஜாக்பாட்! ரயில்வே அறிவித்த புதிய அறிவிப்பு, புதிய வசதி இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ