சேமிப்பு திட்டம்: சமீபத்தில், பிப்ரவரி 1ம் தேதி, நாட்டின் பொது பட்ஜெட், மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சார்பில் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நாட்டுக்காக பல முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். இதனுடன், பல புதிய திட்டங்களையும் தொடங்க நிதியமைச்சர் முன்மொழிந்தார். அதே நேரத்தில், பல பழைய திட்டங்களை ஊக்குவிப்பதாகவும் இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டது. இதனிடையே பழைய திட்டங்களில் ஒன்றான சுகன்யா சம்ரிதி யோஜனா குறித்து மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தாலும், அந்த எதிர்பார்ப்புகளை பொது பட்ஜெட்டில் நிறைவேற்ற முடியவில்லை.
சுகன்யா சம்ரிதி யோஜனா
இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை விரிவுபடுத்துவார் என்றும், மக்கள் நலனுக்காக திட்ட வரம்பு அதிகரிக்கப்படும் என்றும், வட்டி விகிதத்தை உயர்த்தவும் முன்மொழியப்படும் என்றும் பட்ஜெட்டுக்கு முன் எதிர்பார்ப்பில் எழுந்தது. ஆனால், இந்த பட்ஜெட்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க | புதிய வரி முறைக்கு இத்தனை பேர் மாறுவார்கள்... வரிகள் வாரியத்தின் தலைவர் கணிப்பு
சேமிப்பு திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான பணத்தை சேமிக்க இந்திய அரசால் தொடங்கப்பட்ட வைப்புத் திட்டமாகும். நாட்டில் பாலின விகிதம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம், தங்கள் மகள்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க பெற்றோர்களை ஊக்குவிப்பதாகும். சுகன்யா சம்ரிதி யோஜனா 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கப்படலாம். தற்போது இந்த திட்டம் டெபாசிட்டுகளுக்கு 7.6% வட்டி வழங்குகிறது. இந்திய அரசின் 'பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி யோஜனா தொடங்கப்பட்டது.
ரூ 250 உடன் கணக்கு தொடங்கலாம்
இந்தத் திட்டம் நீங்கள் ரூ.250 இல் கணக்கைத் தொடங்கி, முதல் மாதம் ரூ.750ஐத் தொடர்ந்து மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்தால், உங்கள் மொத்த ஆண்டு வைப்புத் தொகை ரூ.12,000 ஆக இருக்கும். உங்கள் மகள் பிறந்தவுடன் கணக்கைத் திறந்தீர்கள் என்று வைத்துக் கொண்டால், அவளுக்கு 21 வயதாகும் போது உங்கள் முதலீடு ரூ. 1,80,000 ஆக இருக்கும், அதே சமயம் ரூ. 3,47,445 மதிப்புள்ள வட்டியைப் பெறுவீர்கள். எனவே, 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக ரூ.5,27,445 பெறுவீர்கள்.
மேலும் படிக்க | அதானிக்கு அள்ளிக்கொடுத்த SBI-ன் கடந்த 3 மாத லாபம் என்ன தெரியுமா? பல கோடியாம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ