Budget 2023: புதிய வருமான வரி அடுக்குகள் - உங்கள் வரியை கணக்கிடுவது எப்படி?

Budget 2023: வரி வரம்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? புதிய மற்றும் பழைய வரி முறைகளில் உள்ள வித்தியாசம் என்ன? இதை முழுவதுமாக இங்கு புரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2023, 07:19 PM IST
  • புதிய வரி அமைப்பின் கீழ், ஒருவரது வரிக்குட்பட்ட வருமானம் (டாக்சபிள் இன்கம்) 7 லட்சத்திற்குள் இருந்தால், அவருக்கு வரி விதிக்கப்படாது.
  • வரிக்கு உட்பட வருமானம் என்றால் என்ன?
  • ஒருவரது மொத்த ஆண்டு ஊதியத்திலிருந்து நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனை கழித்த பிறகு கிடைக்கும் வருமானம், வரிக்குட்பட்ட வருமானமாகும்.
Budget 2023: புதிய வருமான வரி அடுக்குகள் - உங்கள் வரியை கணக்கிடுவது எப்படி?  title=

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகைகள்: இன்று மத்திய அரசு சார்பில் 2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டார். பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அது பொய்க்காத வண்ணம் 2023-24 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்கள் நீண்ட நாட்களாக வருமான வரி விலக்குக்காக காத்திருந்தனர். தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. வருமான வரி விலக்கு பற்றிய பெரிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

வருமான வரி

வரி செலுத்துவோர் நலனுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவற்றில், வருமான வரி தொடர்பாக, புதிய வரி விதிப்பில், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தில் தள்ளுபடி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார். முன்னதாக இந்த தள்ளுபடி ரூ.5 லட்சம் வரை கிடைத்தது. இதனுடன் வருமான வரி ஸ்லாபும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கப்படாது. சம்பளம் வாங்கும் வர்க்கத்தினர் இதன் மூலம் பயனடைவார்கள்.

வருமான வரி அடுக்கு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில், ‘2020 ஆம் ஆண்டில், 2.5 லட்சத்தில் இருந்து 6 வருமான அடுக்குகளுடன் புதிய தனிநபர் வருமான வரி முறையை அறிமுகப்படுத்தினேன். இப்போது இந்த அமைப்பில் உள்ள வரி கட்டமைப்பை மாற்றவும், அடுக்குகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்கவும், வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக அதிகரிக்கவும் முன்மொழிகிறேன்.’ என்று கூறினார்.

வரி வரம்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? புதிய மற்றும் பழைய வரி முறைகளில் உள்ள வித்தியாசம் என்ன? இதை முழுவதுமாக இங்கு புரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | Budget 2023-24 Live Updates: பட்ஜெட் உரை நிறைவு... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

புதிய வரி அமைப்பு (New Tax Regime)

புதிய வரி அமைப்பின் கீழ், ஒருவரது வரிக்குட்பட்ட வருமானம் (டாக்சபிள் இன்கம்) 7 லட்சத்திற்குள் இருந்தால், அவருக்கு வரி விதிக்கப்படாது. வரிக்கு உட்பட வருமானம் என்றால் என்ன? ஒருவரது மொத்த ஆண்டு ஊதியத்திலிருந்து நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனை கழித்த பிறகு கிடைக்கும் வருமானம், வரிக்குட்பட்ட வருமானமாகும். இந்த வருமானம் 7 லட்சத்திற்குள் இருந்தால், அந்த நபர் வரி செலுத்த வேண்டியதில்லை. ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனை கழித்த பிறகு, ஆண்டு வருமானம் 7 லட்சத்தை தாண்டினால் பின் வரும் வரி விகிதங்களில் வரி விகிதங்களில் வரி வசூலிக்கப்படும்.

- ரூ. 0 முதல் 3 லட்சம் - ஒன்றுமில்லை

- ரூ. 3 முதல் 6 லட்சம் - 5%

- ரூ. 6 முதல் 9 லட்சம் - 10%

- ரூ. 9 முதல் 12 லட்சம் - 15%

-  ரூ. 12 முதல் 15 லட்சம் - 20% 

- ரூ 15 லட்சத்திற்கு மேல் - 30% வரி.

 

புதிய மற்றும் பழைய வரி முறைகளின் விகிதங்களை இந்த அட்டவணையின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

வரிக்குட்பட்ட வருமானம்

வரி விகிதம்(பழைய வரி முறை)

வரி விகிதம் (புதிய வரி முறை)
ரூ. 2.5 லட்சம் வரை ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
ரூ. 2.5 - 3 லட்சம் 10% ஒன்றுமில்லை

ரூ. 3 - 5 லட்சம்

10% 5%
ரூ. 5 - 6 லட்சம் 20% 5%
ரூ. 6 - 9 லட்சம் 20% 10%
ரூ. 9 - 10 ல்ட்சம் 20% 15%
ரூ.  10 - 12 லட்சம் 30% 15%
ரூ.  12 - 15 லட்சம் 30% 20%
ரூ. 15 லட்சத்துக்கு மேல் 30% 30%
ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன்  ரூ. 50,000

ஆண்டு வருமானம் 15.5 லட்சம் வரை - ரூ. 50,000, ரூ. 15.5 லட்சத்துக்கு மேல் - ரூ. 52,500

வரிக்குட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
வரிக்குட்பட்ட வருமானம் ரூ. 7 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் 20% ஒன்றுமில்லை

மேலும் படிக்க | Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News