Beauty Tips: அழகாக இருக்க வேண்டும், முகம் பொலிவுடன் இருக்க வேண்டும், எப்போதும் நம் கண்களும் முகமும் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? நம் முகமே நமது கண்ணாடி. ஆகையால் நம் முகத்தின் அழகும் பொலிவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. பருக்கள், மருக்கள, கரைகள் இல்லாத பொலிவான முகம் இயற்கையாகவே அழகிய முகமாக கருதப்படுகிறது.
பலர் முக அழகை அதிகமாக்கிக் கொள்ள ஒப்பனை அதாவது மேக்கப் -ஐ (Make Up) சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஒப்பனை பொருட்களின் பயன்பாட்டால் பல பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இது மட்டும் இல்லாமல் ஒப்பனை பொருட்களால் சில மனி நேரத்திற்கு மட்டுமே முகத்தை பளிச்சென்று வைத்திருக்க முடியும். ஆனால் நிரந்தர அழகை பராமரிக்க அவற்றை சார்ந்து இருக்க முடியாது. தூய்மையான இயற்கையான அழகிற்கு எந்த ஒப்பனையும் ஈடாகாது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள தான் வேண்டும். சில தினசரி செயல்முறைகள் மூலம் இயற்கையான வழியில் நமது அழகை மெருகேற்றலாம். அப்படிப்பட்ட சில எளிய டிப்ஸ்களை இந்த பதிவில் காணலாம்.
உங்கள் சருமத்தின் பொலிவை அதிகரிக்கும் ஐந்து எளிய டிப்ஸ்கள்
நன்றாக சாப்பிடுங்கள்
பலதரப்பட்ட வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கூடிய சமச்சீரான உணவை (Balanced Diet) நாம் தினமும் உட்கொள்ள வேண்டும். இது நமது சருமம் உள்ளிருந்து பொலிவு பெற மிகவும் இன்றியமையாததாகும். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது நமது ஒட்டுமொத்த தோற்றத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகையால் நமது தினசரி உணவில் அதிகப்படியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் நமது இயற்கையான அழகு மேம்படும்.
அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளவும்
தினமும் நாம் தேவையான அளவு தண்ணீரை (Water) குடித்தால் தான் நமது சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 முதல் 12 கிளாஸ்கள் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை உட்கொண்டால் வளர்ச்சிதை மாற்றம் நன்றாக இருக்கும், சருமமும் அழகாக இருக்கும்.
மேலும் படிக்க | 2 வாரத்தில் முகம் கண்ணாடி போல் ஜொலிக்க வேண்டுமா, அப்போ இப்படி பண்ணுங்க
உடற்பயிற்சி அவசியம்
தினமும் உடற்பயிற்சி செய்வதால் நமது சருமம் பளபளப்பாகவும் நமது தோற்றம் பிட்டாகவும் இருக்கும். நடைப்பயிற்சி, ஜாகிங், பளு தூக்குதல், யோகாசனம் என பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. உடற்பயிற்சிகள் (Exercise) நம் சரும பொலிவை அதிகரிப்பதுடன் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
சருமத்தை பாதுகாக்கவும்
முகப்பொலிவை மேம்படுத்த அடிக்கடி தண்ணீர் கொண்டு முகத்தை கழுவுவது நல்லது. இது தவிர சருமம் (Skin Care) வரண்டு போகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக எண்ணைப்பசை சேராமல் இருக்க எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் சன் ஸ்கிரீன் போட்டுக்கொள்வதும் சரும பாதுகாப்பிற்கு ஏற்றதாக இருக்கும்.
இயற்கையான ஃபேஸ் பாக்குகள்
ரசாயனங்கள் கலந்த பேஸ் பாக்குகளை விட இயற்கையான ஃபேஸ் பாக்குகள் (Natural Face Pack) முகப்பொலிவிற்கு நன்மை தரும். இரவு தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு உறங்குவதால் சருமத்தின் இயற்கையான போலிவு அதிகரிக்கும். கடலை மாவு, பயத்த மாவு, பழங்கள், பழ தோல்கள், பழச்சாறுகள், தயிர், பால் ஏடு ஆகியவற்றை நாம் ஃபேஸ் பாக்குகளாக பயன்படுத்தலாம் .
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொப்பையால் தொல்லையா? சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க... உடனே பெல்லி ஒல்லியாயிடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ