ATM-ல் பணம் எடுக்கணுமா? உங்கள் பாதுகாப்புக்கான tips இதோ!!

மக்கள் காட்டும் அஜாக்கிரதைகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் முழுத் தொகையையும் மக்களின் கணக்குகளிலிருந்து எடுத்து விடுகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2020, 08:09 PM IST
  • ATM களில் பணம் எடுக்க பல வகையான விதிகள் செய்யப்பட்டுள்ளன.
  • நெரிசலான இடத்தில் அல்லது வங்கி கிளையில் அமைந்துள்ள ATM-ஐ முடிந்தவரை பயன்படுத்தவும்.
  • எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய PIN-ஐ உருவாக்கவும்.
ATM-ல் பணம் எடுக்கணுமா? உங்கள் பாதுகாப்புக்கான tips இதோ!!  title=

புதுடெல்லி: வங்கி ATM-மில் (Bank ATM) இருந்து பணத்தை எடுக்க பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் 4-5 முறை செல்கிறோம். இருப்பினும், ATM களில் பணம் எடுக்க பல வகையான விதிகள் செய்யப்பட்டுள்ளன. அவை பின்பற்றப்பட வேண்டும். மக்கள் காட்டும் அஜாக்கிரதைகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் (Hackers) முழுத் தொகையையும் மக்களின் கணக்குகளிலிருந்து எடுத்து விடுகிறார்கள்.

இதை தவிர்க்க, சில உதவிக்குறிப்புகளை நாங்கள் இங்கு உங்களுக்குக் கூறுகிறோம். இவற்றின் உதவியுடன் நீங்கள் ATM-ல் கவனமாக பணத்தை எடுக்க முடியும்.

ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்குப் பிறகும் கேன்சல் பட்டன்:

ATM கணினியில் ‘கேன்சல்’ பட்டன் உள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் முடிந்த பிறகு நீங்கள் இதை அழுத்த வேண்டும். இப்படி செய்தால் உங்கள் கார்டை யாரும் ஹேக் செய்ய முடியாது. கேன்சல் பட்டனை அழுத்துவதால் உங்கள் விவரங்களும் யாரிடமும் போகாமல் இருக்கும்.

வங்கி அல்லது நெரிசலான ATM –ஐ பயன்படுத்தவும்

நெரிசலான இடத்தில் அல்லது வங்கி கிளையில் அமைந்துள்ள ATM-ஐ முடிந்தவரை பயன்படுத்த முயற்சிக்கவும். ஒதுங்கிய பகுதியில் அமைந்துள்ள ATM-களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனென்றால், வெறிச்சோடிய இடத்தில் அமைந்துள்ள ATM -ஐ க்ளோனிங் அல்லது ஃபிஷிங் செய்ய ஹேக்கர் பயன்படுத்தலாம்.

உண்மையில், ATM கார்டு பற்றிய தகவல்களைத் திருடுவது உங்களை எளிதாக மோசடிக்கு ஆளாக்க முடியும். இது ATM ஸ்கிம்மிங் என்று அழைக்கப்படுகிறது. இதில், திருடர்கள் ATM இயந்திரத்தின் கார்டு ரீடரில் ஒரு போலி கார்டு ரீடரைப் பொருத்தி, கடவுச்சொல்லைக் கண்டுபிடிக்க விசைப்பலகையில் ஸ்கேனரை வைப்பார்கள்.

ATM -க்குள் நுழைவதற்கு முன் இந்தத் திரையைப் பாருங்கள்

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ATM-மில் முகப்புத் திரை (Home screen) காணப்படும்போதுதான், ​​பரிவர்த்தனைக்கு உங்கள் அட்டையை வைக்க வேண்டும். பரிவர்த்தனை முடிந்ததும், முகப்புத் திரை மீண்டும் தோன்றத் தொடங்கும் போது, ​​ ATM-மிலிருந்து வெளியே செல்லுங்கள். உங்கள் சிறிய தவறு காரணமாக, நீங்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடலாம்.

ALSO READ: Umang App மூலம் மிக எளிதாக இந்த வழியில் PF தொகையைப் பெறலாம்!!

அந்நியர்களிடமிருந்து உதவி பெற வேண்டாம்

பரிவர்த்தனை செய்யும் போது எந்த அறியப்படாத நபரிடமிருந்தும் ATM தொடர்பான எந்த உதவியையும் கேட்க வேண்டாம். ATM-மில் இருந்து பணத்தை எடுப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், ATM பாதுகாப்பில் உள்ள காவலரின் உதவியைக் கோரலாம். வேறு யாரையும் நம்ப வேண்டாம்.

ஏடிஎம்மில் பின் எழுத வேண்டாம்

சில நேரத்தில் மறந்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் டெபிட் கார்டுகள் அல்லது ATM-களில் பின் எண்களை எழுதுகிறார்கள். இது ஒரு நல்ல பழக்கம் அல்ல. இதைச் செய்வது உங்களுக்கு கெடுதலை விளைவிக்கக்கூடும். எனவே எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய PIN-ஐ உருவாக்கவும். இதனுடன், உங்கள் டெபிட் கார்டின் பின் அவ்வப்போது மாற்றப்பட வேண்டும்.

அட்டை இல்லாத பரிவர்த்தனைகளை செய்யுங்கள்

இப்போதெல்லாம் பல வங்கிகள் ATM-களில் அட்டை இல்லாத பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. உங்கள் வங்கியும் இந்த சேவையை வழங்கியிருந்தால், நிச்சயமாக அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கார்ட் ஹேக்கர்களால் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கலாம்.

ALSO READ: EPF கணக்கில் இந்த தவறை செய்யாதீர்கள்... மீறினால் ரூ.50,000 வரை இழக்க நேரிடும்!

Trending News