Gold Price: தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை; மகிழ்ச்சியில் இல்லதரசிகள்

தென்னிந்தியாவில் நகைகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. திருமணம் மட்டுமல்லாது, பிற சடங்குகளிலும், தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது எனலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2022, 12:20 PM IST
Gold Price: தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை; மகிழ்ச்சியில் இல்லதரசிகள் title=

பொதுவாக பெண்கள் மத்தியில் தங்க நகைகள் வாங்கும் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும். அதிலும் தென்னிந்தியாவில் நகைகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. திருமணம் மட்டுமல்லாது, பிற சடங்குகளிலும், தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது எனலாம்.

ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

உக்ரைன் ரஷ்யா போர் நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில், இன்றும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து சவரன் ரூ.39,424-க்கு விற்பனை ஆகிறது. 

மேலும் படிக்க | மீண்டும் குறைந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் ஹேப்பி

24 காரட் தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.18 குறைந்து ரூ. 5,376 என்ற விலையிலும் ஒரு சவரன் விலை ரூ144 குறைந்து ரூ. 43,008 ஆகவும் உள்ளது. 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,037-க்கு விற்பனை ஆகிறது.

உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான அணுகுமுறை உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். 

மேலும் படிக்க | மீண்டும் விலை உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News