விரும்பிய வேலையை செய்பவர்களைக் காட்டிலும், பிடிக்காத வேலையை செய்பவர்களுடைய எண்ணிக்கை தான் இங்கு அதிகம். அதற்கு கவலைப்பட்டுக்கொண்டு, சோர்வாக இருந்தால், எதார்த்தமான உலகில் இருந்து காணாமல்போய்விடுவோம். உங்கள் இலக்குக்கான பயணத்தை அடைய வேண்டும் என்ற லட்சிய வெறி அணையாமல் இருக்க வேண்டுமானால், இப்போது கிடைத்திருக்கும் இந்த வேலையை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக்கொள்வது ஒரு வகையில் புத்திசாலித்தனம். அந்தவகையில் பிடிக்காத வேலையை, பிடித்த ஒன்றாக மாற்றுவது எப்படி? என்பதை கற்றுக்கொள்ளலாம்.
1. எண்ண ஓட்டம்
ஏதோ ஒரு சூழ்நிலையில், பிடிக்காத வேலைக்கு வந்துவிட்டீர்கள். அதைப்பற்றி கவலைக் கொள்ளாதீர்கள். இப்போது இருக்கும் இந்த சூழ்நிலையில் சரியான திசையில் பயணிக்க வேண்டுமானால், உங்கள் எண்ண ஓட்டத்தை மாற்றுங்கள். பிடிக்காத விஷயங்களை மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொண்டிருந்தால், மனதளவில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகுமே தவிர, நல்ல விஷயங்கள் நடக்காது. இருக்கும் இடத்தில் முடிந்தளவுக்கு நேர்மறையாக சிந்தித்து, பணிச்சூழலையும் அதற்கேற்ப மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ALSO READ | Watermelon: நீண்ட நேர தாம்பத்தியத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் இயற்கை வயக்ரா தர்பூசணி!
2. திறமை வளர்த்துக்கொள்ளுதல்
வேலைக்கு சேர்ந்துவிட்டீர்கள் என்றால், முடிந்தளவுக்கு அந்த வேலையின் அனைத்து விஷயங்களையும் சிரத்தை எடுத்துக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தலைமை மற்றும் கம்பெனியில் அதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்காவிட்டாலும், நீங்கள் சொந்த முயற்சியில் இறங்குங்கள். ஆன்லைனில் அனைத்து விஷயங்களும் கொட்டிக்கிடக்கிறது. முயற்சி செய்தால், நிச்சயம் கற்றுக்கொள்ள முடியும்.
3. இலக்கு
எந்தவொரு வேலையிலும் இலக்கு நிர்ணயித்து பயணித்தீர்கள் என்றால் சோர்வு மற்றும் வெறுப்பு இருக்காது. நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் பயணித்துக் கொண்டிருப்பீர்கள். முதலில் சிறிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதனை அடையும்போது உங்களுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கும். இது அடுத்தடுத்த இலக்குகளை வேகமாக அடைவதற்கான உந்துசக்தியை கொடுக்கும்.
ALSO READ | Cancer: புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் ‘இந்த’ பழக்கங்களை இன்றே கைவிடவும்!
4. தன்னம்பிக்கை
நீங்கள் செய்யும் பணிக்கு, நீங்கள் தான் ராஜா என்ற மன நிலையில் இருக்கும்போது, ரிலாக்ஷாக இருப்பீர்கள். தைரியத்துடன் உங்கள் பணியை அணுகுவீர்கள். இந்த மன நிலை, உங்கள் வேலையை சிறப்பாகவும், திறம்படவும் செய்வதற்கு உதவியாக இருக்கும். பணியிடத்தில் நேர்மறையான வாசகங்கள், புகைப்படங்களை கண்ணில்படுமாறு வைத்துக்கொள்வது, தன்னம்பிக்கையை கையாளுவதற்கு உதவியாக இருக்கும்.
5. கொஞ்சம் ரிலாக்ஷ்
வேலைக்கு சென்றுவிட்டால், அந்த வேலையில் கவனமாக இருக்க வேண்டும் என்பது எதார்த்தமான ஒன்று என்றாலும், இடையிடையே கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க முயற்சி செய்யுங்கள். விளையாடுவது, காமெடி பார்ப்பது அல்லது உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும் விஷயங்களை செய்யலாம். அவை, நம்மை ஆக்டிவாக வைத்துக்கொள்ளும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR