புதுடெல்லி: ஒவ்வொரு கிரக மாற்றமும் நம் வாழ்க்கையை பாதிக்கிறது. மார்ச் 24, 2022 அன்று, செல்வம், புத்திசாலித்தனம், சாமர்த்தியம் ஆகியவற்றின் காரணிகளான புதன் கிரகம், ராசியை மாற்றி மீன ராசிக்குள் நுழையப் போகிறது. அதன்படி இந்த 5 ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். புதனின் ராசி மாற்றம் சில 5 ராசிக்காரர்களுக்கு சுப பலனை தரப்போகிறது. அதன்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். அவர்களின் வருமானம் கூடும். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். எங்கிருந்தும் திடீரென்று பணம் கிடைக்கும். திரைப்படம், ஊடகம், மார்க்கெட்டிங், மாடலிங் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார்கள்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் கிரகம் வேலை, வியாபாரத்தில் பெரிய முன்னேற்றத்தை தருவார். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு-அந்தஸ்த்து கிடைக்கலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் முடியும். மொத்தத்தில், பண ஆதாயங்கள் இருக்கும் மற்றும் இது நிதி நிலைமையை வலுப்படுத்தும். அது எதிர்காலத்திலும் பலன் தரும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாறுதலும் மிகவும் சாதகமாகும். தங்கள் செயல்களில் வெற்றி பெறத் தொடங்குவார்கள். இதுவரை முடங்கிக் கிடக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். பணம் சாதகமாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
துலாம்: புதனின் சஞ்சாரம் துலாம் ராசியினருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு - அந்தஸ்த்து தரும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். எதிர்காலத்திலும் நிறைய நன்மைகளைத் தரும். மொத்தத்தில் எல்லா வகையிலும் நல்ல நேரம்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் நன்மை தரும். சிக்கிய பணத்தைக் காணலாம். வணிகர்கள் பெரிய ஆர்டர்களைப் பெறலாம். வேலையில் வெற்றி பெறுவீர்கள். குறிப்பாக வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR