Indian Railways Big Update: ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் விலக்கு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல தகவல்களை தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
வயது வரம்பு மாறும்
மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்ற ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கான மானியத்தை தக்க வைத்துக் கொண்டு இந்த சலுகைகளின் விலையை குறைக்க யோசனை உள்ளது. தற்போது வரை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மேலும் படிக்க | கிரெடிட் கார்ட் பில் கட்ட மறந்துட்டீங்களா? தாமத கட்டணத்தை தவிர்க்க சில வழிகள்!
53% தள்ளுபடி கிடைக்கும்
ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ரயிலில் பயணிக்கும் அனைத்து குடிமக்களும் சராசரியாக 53 சதவீத கட்டணத்தில் தள்ளுபடி பெறுகின்றனர். இதனுடன், திவ்யாஞ்ஞர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர பல வகையான சலுகைகள் கிடைக்கும்.
எந்த வகுப்பில் தள்ளுபடி வழங்கப்படும்?
லோக்சபாவில், ரயில்வே அமைச்சரிடம், ரயில்வே சலுகை குறித்து, ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை, ரயில்வே மீண்டும் வழங்குமா என, கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 2019-20ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு ரயில்வே 59,837 கோடி ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது. இது தவிர, ஸ்லிப்பர் மற்றும் மூன்றாவது ஏசியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஆதார் மோசடி குறித்த அச்சமா? Masked Aadhaar Card மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ