வெயிட்டிங் லிஸ்ட் விதியை மாற்றிய IRCTC.. ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. கட்டாயம் படிக்கவும்

காத்திருப்பு டிக்கெட் பிரச்சனைக்கு முடிவு கட்ட ரயில்வே மெகா திட்டம் வகுத்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரயில்வே 1 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 17, 2023, 07:29 AM IST
  • எத்தனை வகையான காத்திருப்பு பட்டியல்கள் உள்ளன.
  • காத்திருப்பு டிக்கெட்டுகளின் தொல்லை எப்படி முடிவுக்கு வரும்.
  • ரயில்வேயின் 1 லட்சம் கோடி ரூபாய் திட்டம்.
வெயிட்டிங் லிஸ்ட் விதியை மாற்றிய IRCTC.. ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. கட்டாயம் படிக்கவும் title=

பண்டிகை காலங்களில், ரயிலில் பயணம் செய்வது எளிதானது அல்ல. நெரிசல் மிகுந்த ரயில்களில், டிக்கெட்டுகள் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படுகின்றன. மக்கள் வீடுகளுக்குச் செல்ல உறுதியான / கன்பார்ம் டிக்கெட்டுகளைப் பெற முடியவதில்லை. காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. காத்திருப்பு டிக்கெட்டுகள் பயணிகளுக்கு மட்டுமின்றி, ரயில்வே துறைக்கும் தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது காத்திருப்பு டிக்கெட் சிரமத்தை போக்க ரயில்வே புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ரயில்வே 1 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கும்.

ரயில்வேயின் 1 லட்சம் கோடி ரூபாய் திட்டம்:
அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரயில்களை வாங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. எகனாமிக்ஸ் டைம்ஸ் உடனான உரையாடலின் போது, ​​மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், காத்திருப்புப் பட்டியலின் தொந்தரவை அகற்ற இந்திய ரயில்வே இந்த மெகா திட்டத்தை செயல்படுத்தி வருவதாகக் கூறினார். இந்த திட்டத்துக்கான செலவு ரூ.1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார். இந்த திட்டத்தின் நோக்கம் பல ஆண்டுகளாக இயங்கும் பழைய ரயில்களின் இருப்புக்களை மாற்றுவதாகும். இந்தத் திட்டத்தின் மூலம், 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் புதிய ரயில்கள் ரயில்வேயில் சேர்க்கப்படும். அடுத்த சில ஆண்டுகளில் பழைய ரயில்களுக்குப் பதிலாக புதிய ரயில்கள் இயக்கப்படும் என்றார். அதே நேரத்தில், பயணிகளுக்கு போதுமான இருக்கைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: ராஜராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு இன்று ஜாக்பாட்

காத்திருப்பு டிக்கெட்டுகளின் தொல்லை எப்படி முடிவுக்கு வரும்?
ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இருக்கைகள் கிடைக்கும். ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ​​உறுதியான டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போது தினமும் 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில்வே தினமும் 10754 பயணங்களை இயக்குகிறது. ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பயணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதில் தினமும் 3000 கூடுதல் பயணங்கள் சேர்ந்தால் டிக்கெட் காத்திருப்பு தொல்லை தீரும். ஆண்டுதோறும் பார்த்தால், ஆண்டுக்கு 700 கோடி பேர் ரயிலில் பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டுக்குள் 1000 கோடியை எட்டும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ரயில்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியது அவசியம். ரயில்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் உயர்த்தினால், ரயில்வேயில் காத்திருப்பு டிக்கெட் பிரச்னை முடிவுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எத்தனை வகையான காத்திருப்பு பட்டியல்கள் உள்ளன:
காத்திருப்பு பட்டியல் (Waiting List) குறித்து பல பயணிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், எத்தனை வகையான காத்திருப்பு பட்டியல்கள் உள்ளன என்பது குறித்து தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவுதான். எந்த காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன? ரயில்வேயின் காத்திருப்பு டிக்கெட்டுகளில் GNWL, RLWL, PQWL, RLGN, RSWL போன்ற காத்திருப்பு டிக்கெட்டுகள் அடங்கும்.

GNWL டிக்கெட்: GNWL என்றால் பொது காத்திருப்பு பட்டியல். இந்த காத்திருப்பு பயணச்சீட்டு, நீங்கள் செல்லும் ரயில் எந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறதோ அங்கு நீங்கள் ஏறும்பட்சத்தில் இது வழங்கப்படும். 

RLWL டிக்கெட்: RLWL என்பது Remote Location வெயிட்டிங் லிஸ்ட். உதாரணமாக, ஒருவர் ஹவுராவில் உள்ள பாட்னாவிலிருந்து டெல்லி ரயிலுக்கு டிக்கெட் எடுத்தால், அவருக்கு RLWL காத்திருப்பு டிக்கெட் கிடைக்கும். GNWL உடன் ஒப்பிடும்போது, ​​அத்தகைய காத்திருப்புப் பட்டியலில் உறுதிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

PQWL டிக்கெட்: PQWL என்பது Pooled Quota வெயிட்டிங் லிஸ்ட். ரயிலின் தொடங்கும் இடம் மற்றும் இறுதி இலக்கு நிலையங்களுக்கு இடையே உள்ள எந்த நிலையத்திற்கும் இடையில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே PQWL கிடைக்கும். இந்த காத்திருப்பு டிக்கெட் கூட உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

TQWL டிக்கெட்: TQWL என்றால் Tatkal Quota காத்திருப்பு பட்டியல். ஒரு பயணி தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்து, உறுதியான டிக்கெட் கிடைக்காதபோது, ​​ரயில்வே அவருக்கு TQWL டிக்கெட்டை வழங்குகிறது. இதுவும் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. 

மேலும் படிக்க | மார்கழி மாதம் வந்தாச்சு! கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News