உங்களை மற்றொருவருடன் ஒப்பிடுவது சரியா?

எந்தவொரு விஷயத்திலும் ஒருவருடன் உங்களை ஒப்பிட்டு பார்ப்பது மன ரீதியிலான நோயை ஏற்படுத்தும் என்று கூறுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 3, 2022, 04:32 PM IST
  • ஒப்பிடும் பழக்கம் விரைவில் உங்கள் வாழ்க்கையில் ஒரு நோயாக மாறிவிடும்.
  • மக்கள் சில சூழ்நிலைகளில் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறார்கள்.
உங்களை மற்றொருவருடன் ஒப்பிடுவது சரியா? title=

சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவருடன் தங்களை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் கொண்டுள்ளனர், அவ்வாறு மற்றவரோடு ஒப்பிடுவது தவறான செயலாகும்.  ஒப்பிடும் பழக்கம் விரைவில் உங்கள் வாழ்க்கையில் ஒரு நோயாக மாறிவிடும், அதனால் வாழ்க்கையில் எந்தவொரு மகிழ்ச்சியையும் உங்களால் அனுபவிக்க முடியாமல் போகலாம்.  மக்கள் சில சூழ்நிலைகளில் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறார்கள், அது பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களையும், மன அழுத்தத்தையுமே விளைவிக்கிறது.

pexels

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: பணி ஓய்வுபெறும் வயது, ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படலாம்

அடுத்தவர்களின் சண்டைகள் மற்றும் பிறரைப் பற்றிய விஷயங்களை நீங்கள் எப்படியெல்லாம் கூறக்கூடாது என்பதைப் பற்றிய பாடத்தைக் கற்றுக்கொள்ள, யுவர்ஸ்வைஸ்லி ஒரு மோட்டிவேஷன் வீடியோவை வழங்கியுள்ளார், இந்த வீடியோவை பார்ப்பதன் மூலம் நமக்கு ஒரு ஊக்கம் ஏற்படும்.  அந்த வீடியோவில், காகம் ஒன்று, அழகான வெள்ளை அன்னத்தை நீ இந்த நகரத்தில் மிகவும் மகிழ்ச்சியான பறவையா? என்று கேட்கிறது.

 

அதற்கு அந்த அன்னம் எதிர்மறையாக பதிலளித்து, ஒரு கிளியை நோக்கிக் காட்டுகிறது. “சந்தோஷமும் நானும்? நீ இந்த கிளியைப் பார்த்ததில்லையா? இந்த கிளி ஒன்றல்ல, அழகான இரண்டு வண்ணங்களை கொண்டுள்ளது.  அதனை கேட்ட அந்த கிளி, உடனே அந்த பறவைகளிடம் மயிலை நோக்கிச் காட்டுகிறது. அது அழகாக இருந்தும் தற்போது கூண்டில் அடைக்கப்பட்டு வியாபாரத்திற்காக விற்கப்பட வைத்திருப்பதை குறித்து கூறுகிறது.  உடனே அந்த மயில், யாருடைய பேச்சையும் கேட்காத, எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் பறந்து செல்லக்கூடிய காகமாக இருக்க தான் எனக்கு ஆசை என்று கூறியது.  இவ்வாறு இந்த வீடியோ நிறைவு பெறுகிறது, இதன்மூலம் கூறப்படும் கருத்து என்னவென்றால் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒன்றைவிட விட ஒன்று மேன்மையானதாக தான் தெரியும், ஆனால் அதன் உள்ளே சென்று பார்த்தால் தான் அதன் உண்மை நிலை முழுமையாக தெரியும்.  அதனால் உங்களை ஒருபோதும் மற்றவர்களுடன் எப்போதும் ஒப்பீட்டு பார்க்காதீர்கள் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

மேலும் படிக்க | அமைதியான குணத்தால் மக்கள் மனதை வெல்லும் ‘4’ ராசிக்காரர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News