புதுடெல்லி: இந்திய அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டுடுள்ளது. Gramin Dak Sevak பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அந்தந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்த்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.
இந்தியா போஸ்ட் GDS ஆட்சேர்ப்பு 2022 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் சாரம்சத்தை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
இந்தியா போஸ்ட் GDS ஆட்சேர்ப்பு 2022: இந்தியாவின் பல மாநிலங்களில், கிராம டாக் சேவக் பதவிகள் காலியாக உள்ளது. இந்தியா போஸ்ட் GDS ஆட்சேர்ப்பு 2022க்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை, ஏற்கனவே தொடங்கிவிட்டது.
மேலும் படிக்க | JOB ALERT: அசாம் ரைபிள்ஸ் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பிக்கத் தயாரா
2022 மே மாதம் இரண்டாம் தேதியன்று தொடங்கியது. ஜூன் 05ம் தேதி வரை நீடிக்கும் இந்த விண்ணப்ப நடைமுறையில், விண்ணப்பிக்க தகுதியிள்ளவர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், இந்த காலியிடங்கள், இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கிறது.
அரசு வேலையைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இது, நல்ல வாய்ப்பு. பதிவு செயல்முறை ஏற்கனவே நடைபெற்று வருவதால், நீங்கள் தகுதியும் ஆர்வமும் இருந்தால், இந்திய அஞ்சல் துறையின் அந்தந்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
வேலை தொடர்பான விவரங்கள்:
பதவி பெயர்: கிராம அஞ்சல் பணியாளர் (Gramin dak Sevaks)
மொத்த காலியிடங்கள்: 4,310
கல்வித் தகுதி: பத்தாவது வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூபாய் 14,500/-
வயது வரம்பு: 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.06.2022
கூடுதல் விவரங்களுக்கு:
மேலும் படிக்க | Job Alert: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு TANGEDCO வழங்கும் வேலைவாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe