கோடிக்கணக்கில் உயிரிழப்பு... இருந்தாலும் கோடியில் புரளும் சிகரெட் கம்பெனிகள்!

World No Tobacco Day: சிகரெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதனை தயாரிக்கும் நிறுவனங்களின் லாபம் கோடிக்கணக்கில் உள்ளது. அந்நிறுவனங்கள் குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 31, 2023, 06:58 PM IST
  • உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
  • சிகரெட் மனிதர்களுக்கு 12 வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
  • இருப்பினும், சிகரெட் விற்பனை அதிகமாகி உள்ளது.
கோடிக்கணக்கில் உயிரிழப்பு... இருந்தாலும் கோடியில் புரளும் சிகரெட் கம்பெனிகள்! title=

World No Tobacco Day: புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் 30 சதவீதம் பேரும், குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் இறக்கும் 80 சதவீதம் பேரும் புகைபிடிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது, உலகளவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இது மனிதர்களுக்கு 12 வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

புகைபிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல பாதிப்புகளை கொண்டபோதிலும், அது மிகவும் பரவலான விற்பனையில் உள்ளது. இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று புகையிலை எதிர்ப்பு தினத்தை அனுசரிக்கிறது. இது உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

நீங்கள் ஒவ்வொரு முறை புகையிலையை நுகரும்போது, உங்கள் நுரையீரலின் ஆயுள் குறைகிறது என கூறப்படுகிறது. புகைப்பிடிப்பவரை மட்டுமன்றி அவரை சுற்றியிருப்பவர்களின் உடல் நலனையும் புகையிலை பாதிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. உலக அளவில் சுமார் 8 மில்லியன் பேர் புகைப்பிடிப்பதனால் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை தடுக்கும் நோக்கிலும் பலரை காக்கும் நோக்கிலும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

1987ஆம் ஆண்டு முதல் இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 7ஆம் தேதி புகைப்பிடிக்க கூடாத நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. 24 மணி நேரமாவது புகைப்பிடிப்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த நாள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அதன் விளம்பரங்களை உலக சுகாதார அமைப்பு 2008ஆம் ஆண்டு தடை செய்தது.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில், சிகரெட் விற்பனை செய்யும் நிறுவனங்களைப் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம். சிகரெட்டால் மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இன்னும் இந்த நிறுவனங்களின் லாபம் கோடிக்கணக்கில் உள்ளது.

மேலும் படிக்க | New Rules: எல்பிஜி சிலிண்டர் விலை முதல் தங்கம் வரை.... ஜூன் 1 முதல் பல விதிகளில் மாற்றம்!!

ஐடிசி

இந்தியாவில் ஐடிசி நிறுவனத்தின் வர்த்தகம் கணிசமான அளவில் உள்ளது. பல்வேறு துறைகளில் ஐடிசியின் வணிகப் பரவல் புகையிலைத் துறையிலும் பரவலாகப் பரவியுள்ளது. இந்த துறையில் ஐடிசியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது. புகையிலை விற்பனை மூலம் ஐடிசி ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது. தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,82,097 கோடியாக உள்ளது. 1910இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் பெயர் இம்பீரியல் டொபாக்கோ என்பதாகும். அதன் பிறகு 1970ல் இந்தியா புகையிலை என்று பெயரிடப்பட்டது. பின்னர் 1974இல் ஐடிசி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

காட்ஃப்ரே பிலிப்ஸ்

காட்ஃப்ரே பிலிப்ஸ் என்பவர் 1944இல் லண்டனில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்திய தொழிலதிபர்கள் இதை வாங்கினார்கள். இந்நிறுவனமும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகிறது.

விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ்

1930ஆம் ஆண்டு விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் (VST Industries) தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் வசீர் சுல்தான் என்பவரால் தொடங்கப்பட்டது. Vazir Sultan Tobacco Company Limited என்ற பெயரும் வாசிரின் பெயரால் சூட்டப்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து நிறுவனம் செயல்படுகிறது.

என்டிசி இண்டஸ்ட்ரீஸ்

என்டிசி நிறுவனம் 1931ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.92 கோடி.

கோல்டன் டொபாக்கோ லிமிடெட்

டால்மியா குரூப் கோல்டன் டொபாக்கோவின் கீழ் சிகரெட் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனம் சுருட்டுகளையும் உற்பத்தி செய்கிறது.

மேலும் படிக்க | அலெர்ட்! ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்! முழு விவரம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News