இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை, எல்ஐசியின் ஐபிஓவிற்காக 'இஎஸ்பிஏ' (கணக்கில் தடுக்கப்பட்ட தொகையின் மூலம் விண்ணப்பம்) வசதியுடன் கூடிய வங்கிக் கிளைகள் ஞாயிற்றுக்கிழமையும் திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (எல்ஐசி) ஐபிஓ புதன்கிழமை சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்காக திறக்கப்பட்டது.
எல்ஐசி ஐபிஓ-வுக்கான விண்ணப்பங்களை இறுதி செய்ய ஞாயிற்றுக்கிழமை அதாவது மே 8 ஆம் தேதி 'ESBA' இன் அனைத்து கிளைகளையும் திறக்க அரசாங்கம் கோரியுள்ளது என்று ஆர்பிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இந்த கோரிக்கையை பரிசீலித்த பிறகு, ஞாயிற்றுக்கிழமையும் (மே 8) ‘ESBA’ வசதியுடன் கூடிய வங்கிக் கிளைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மே 9 ஆம் தேதி வரை இருக்கும்
பொதுவாக முதலீட்டாளர்கள் ஐபிஓ-விற்கு 'இஎஸ்பிஏ' மூலம் விண்ணப்பிக்கிறார்கள். எல்ஐசியின் ஐபிஓ மே 9 ஆம் தேதி முடிவடையும். இதற்கான ஏல ஆர்டர்களை மே 7 ஆம் தேதியும் வைக்கலாம். 3.5 சதவீத பங்குகளை விற்று ரூ.21,000 கோடி திரட்ட அரசு இலக்கு வைத்துள்ளது. எல்ஐசியின் ஐபிஓ மே 9ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: அரசு தரப்பில் அனுப்பப்பட்ட உத்தரவு, விவரம் இதோ
முதல் நாளில் 64 சதவீதம் சப்ஸ்க்ரைப் ஆகியுள்ளது
எல்ஐசி-ன் பொது வெளியீடு முதல் நாளில் 64 சதவீதம் சந்தாவை பெற்றுள்ளது. குறிப்பாக பாலிசிதாரர்கள் பிரிவில் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. முதல் நாள் மதியம் 12.30 மணிக்குள், எல்ஐசி பாலிசிதாரர்கள் பிரிவில் 100% க்கும் அதிகமான சந்தா செலுத்தப்பட்டுள்ளது.
இன்று சந்தா தரவுகளைப் பற்றி பேசுகையில், பாலிசிதாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட அளவு 1.9 மடங்கு சந்தா பெற்றுள்ளது. அதே நேரத்தில், எல்ஐசி ஊழியர்களின் ஒதுக்கீடும் முதல் நாளிலேயே முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது.
சில்லறை முதலீட்டாளர்களுக்கான கையிருப்பு ஒதுக்கீடு இன்று 57 சதவீதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்படியும், நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ முதல் நாளிலேயே முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR