இப்போதைக்கு அமலுக்கு வராது புதிய ஊதியக் குறியீடு: வந்தால் salary slip-ல் வரப்போகும் மாற்றம் என்ன?

அனைத்து ஊழியர்களும், புதிய ஊதியக் குறியீடு குறித்து எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய மாற்றத்தை தள்ளி வைப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2021, 02:54 PM IST
  • புதிய ஊதியக் குறியீடு குறித்து எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் தள்ளி வைக்கப்பட்டது.
  • நிதியாண்டின் இறுதி நாளில் அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு.
  • புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், கொடுப்பனவுகளுக்கு 50 சதவிகித வரம்பு இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
இப்போதைக்கு அமலுக்கு வராது புதிய ஊதியக் குறியீடு: வந்தால் salary slip-ல் வரப்போகும் மாற்றம் என்ன? title=

அனைத்து ஊழியர்களும், புதிய ஊதியக் குறியீடு குறித்து எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய மாற்றத்தை தள்ளி வைப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இது குறித்த ஒரு பெரிய செய்தியில், நான்கு தொழிலாளர் குறியீடுகளும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டது. மாநிலங்கள் இன்னும் இது தொடர்பான விதிகளை இறுதி செய்யவில்லை என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, இப்போது, ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியம், அதாவது டேக் ஹோம் சம்பளம் மற்றும் நிறுவனங்களின் PF நிதி பொறுப்பு ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. 

ஆனால், ஊதியக் குறியீடு நடைமுறைக்கு வந்ததும், அடிப்படை ஊதியம் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிடப்படும் விதம் தான் ஊதிய வகையில் காணப்படும் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். 

கொடுப்பனவுகளுக்கு 50 சதவிகித வரம்பு

- புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், கொடுப்பனவுகளுக்கு 50 சதவிகித வரம்பு இருக்கும்.

- இதன் பொருள் ஒரு ஊழியரின் (Employees) மொத்த ஊதியத்தில் பாதி அடிப்படை ஊதியமாக இருக்கும்.

வருங்கால வைப்பு நிதி (PF) 

- வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு அடிப்படை ஊதியத்தின் குறிப்பிட்ட சதவீதமாக கணக்கிடப்படுகிறது. இதில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவை அடங்கும்.

ALSO READ: Big News: புதிய ஊதியக் குறியீடு இப்போதைக்கு அமலுக்கு வராது, சம்பளம், PF-ல் எந்த மாற்றமும் இல்லை

- பி.டி.ஐ.யின் அறிக்கையின்படி, வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் வருமான வரியை குறைக்க அடிப்படை ஊதியங்களை குறைவாக வைத்திருக்க நிறுவனங்கள் பல கொடுப்பனவுகளாக ஊதியங்களை பிரித்து வருகின்றனர்.

- புதிய ஊதியக் குறியீட்டில் வருங்கால நிதி பங்களிப்பை மொத்த ஊதியத்தில் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை இணைப்புகள், ஊதியங்கள், சமூக, பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சுகாதார பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் குறித்த நான்கு குறியீடுகளை ஏப்ரல் 1, 2021 முதல் செயல்படுத்த தொழிலாளர் அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. நான்கு குறியீடுகளின் கீழ் விதிகளை அமைச்சகம் இறுதி செய்திருந்தது.

இருப்பினும், 2021 நிதியாண்டின் கடைசி நாளில், புதிய ஊதியக் குறியீட்டை (New Wage Code) இப்போதைக்கு செயல்படுத்தப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்தது.

ALSO READ: வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி: ஏப்ரல் 1 முதல் OTP பெறுவதில் பிரச்சனை வரும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News