புது டெல்லி: 2019 ம் ஆண்டில் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், டைரக்டர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் 100 இந்திய பிரபலங்களின் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாததாக முதல் முறையாக பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி முதல் இடம் பிடித்துள்ளார். விராட் கோஹ்லி இந்த ரூ.252.72 கோடியை ஈட்டியுள்ளார். இதே போன்று டாப் 10 பட்டியலில் முதல் முறையாக 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள தென்னிந்திய பிரபலங்கள்:
ரஜினிகாந்த் - 13வது இடம் (100 கோடி)
ஏ.ஆர்.ரகுமான் - 16வது இடம் (94.8 கோடி)
சங்கர் மகாதேவன் - 24வது இடம் (76.48 கோடி)
மோகன்லால் - 27 வது இடம் (64.5 கோடி)
பிரபாஸ் - 44வது இடம் (35 கோடி)
விஜய் - 47 வது இடம்(30 கோடி)
அஜித் - 52வது இடம் (40.5 கோடி)
மகேஷ் பாபு - 54 வது இடம்(35 கோடி)
டைரக்டர் ஷங்கர் - 55 வது இடம்(31.5 கோடி)
கமல்ஹாசன் - 56வது இடம் (34 கோடி)
மம்முட்டி - 62 வது இடம்(33.5 கோடி)
தனுஷ் - 64 வது இடம்(31.75 கோடி)
சிறுத்தை சிவா - 80வது இடம் (12.17 கோடி)
டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் - 84வது இடம் (13.5 கோடி)
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.