இவ்வளவு வருமான வரி செலுத்தணுமா? அதிர்ச்சியில் வரி செலுத்துவோர்

Tax Calculator: நிதியமைச்சகத்திலிருந்து, சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் இருந்து தற்போது வரை, வரி செலுத்துவோருக்கு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன, அதே போல் டாக்ஸ் ஸ்லாபும் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 4, 2023, 12:28 PM IST
  • வருமான வரி எப்படி கணக்கிடப்படுகிறது.
  • வரவிருக்கும் பட்ஜெட்டில் அரசாங்கம் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பு.
  • இந்த முறை வரி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வளவு வருமான வரி செலுத்தணுமா? அதிர்ச்சியில் வரி செலுத்துவோர் title=

Budget 2023: இன்னும் சில நாட்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது, அதன்பின் பிப்ரவரி 1, 2023 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தொழிலதிபர்கள், விவசாயிகள் உள்ளிட்ட வணிக வர்க்கத்தினர் இந்த பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். இதனிடையே ஒவ்வொரு பட்ஜெட்டிலும், வரி செலுத்துவோருக்கு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன, அத்துடன் வரி அடுக்குகளும் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன.

2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி விலக்கு
இதனிடையே இரண்டு ஆட்சிகளின் வரி அடுக்குகளிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. புள்ளிவிவரங்களின்படி, பெரும்பாலான வரி செலுத்துவோர் பழைய ஆட்சியை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். ஏனெனில் இரண்டு ஆட்சிகளிலும் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதுவே பழைய ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானத்துக்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டி இருந்தது. மறுபுறம் ஆண்டு வருமானம் 10 முதல் 15 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க | மாத சம்பளம் வாங்குபவரா நீங்கள்? இதன் மூலம் வருமான வரியை சேமிக்கலாம்

இந்த நிலையில் இப்போது, உங்கள் ஆண்டு வருமானம் 10 லட்சமாக இருந்து, நீங்கள் வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்து, இது தவிர, வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் நீங்கள் ரூ. 1.5 லட்சத்தை முதலீடு செய்பவராக இருந்தால், இன்று உங்கள் வரியை எப்படி கணக்கிடுவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

இதுதான் முழு கால்குலேஷன் முறை:

1. உங்கள் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சமாக இருந்தால், நிதி அமைச்சகம் வழங்கிய ரூ.50,000 ஸ்டாண்டர்ட் டிடக்ஷனைக் குறைத்த பிறகு, உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.9.50 லட்சமாகக் குறைக்கப்படும்.

2. இதற்குப் பிறகு நீங்கள் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை சேமித்ததாகக் கருதப்படுகிறது. இதில் நீங்கள் கல்விக் கட்டணம், LIC, PPF, மியூச்சுவல் ஃபண்ட் (ELSS) மற்றும் EPF போன்றவற்றை க்ளேம் செய்யலாம். இதன் மூலம் உங்களின் வரிவிதிப்பு வருமானம் ரூ.8 லட்சமாக குறையும்.

3. ரூ 1 லட்சம் வரை வீட்டு வாடகை கொடுப்பனவில் நீங்கள் வீட்டு உரிமையாளரின் பான் கார்டை கொடுக்க தேவையில்லை. இவ்வளவு வாடகை செலுத்தினால், உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.7 லட்சமாக குறையும். இப்போது இந்த தொகைக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும்.

4. இதில் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்தில் ரூ.12,500க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். இதன்பின், 5 முதல் 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 20 சதவீதம் வீதம், 40 ஆயிரம் வரி விதிக்கப்படும். இதன் மூலம் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை மொத்த வரி ரூ.52,500 ஆக ஆகும்.

5. இப்போது இதற்கு நீங்கள் 4 சதவிகிதம் செஸ் செலுத்த வேண்டும், அதாவது ரூ.2,100. இந்த வழியில், 10 லட்சம் சம்பளத்தில் உங்கள் மொத்த வருமான வரி ரூ.54,600 ஆகும்.

மேலும் படிக்க | IT Tax Returns: வருமான வரியை தாக்கல் செய்யவில்லையா? இந்த பாதிப்புகள் வரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News