புதுடெல்லி: LPG Subsidy: நீங்களும் எல்பிஜி பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. LPG மானியம் (LPG Gas Subsidy) தற்போது வாடிக்கையாளர்களின் கணக்கில் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.
அதன்படி எல்பிஜி (Commercial Gas Cylinder) மானியம் அதாவது எல்பிஜி சமையல் எரிவாயு மானியம் (LPG Gas Subsidy) உங்கள் கணக்கில் வருகிறதா இல்லையா? இது உங்களுக்குத் தெரியாவிட்டால், இதை எப்படி தெரிந்து கொள்வது என்று இங்கே பார்க்கலாம். இப்போது வீட்டில் இருந்தபடியே இதை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
ALSO READ | இல்லத்தரசிகள் தலையில் இடி, சிலிண்டர் விலை மீண்டும் உயர்கிறதா?
எல்பிஜி எரிவாயு (LPG Gas Cylinder) நுகர்வோருக்கு சிலிண்டருக்கு 79.26 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு மானியங்கள் கிடைத்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், எத்தனை முறை மானியம் பெறுவது என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். உண்மையில், பலர் 79.26 ரூபாய் மானியம் பெறுகிறார்கள், பலர் 158.52 ரூபாய் அல்லது 237.78 ரூபாய் மானியம் பெறுகிறார்கள். இருப்பினும், உங்கள் கணக்கில் மானியம் வந்துள்ளதா இல்லையா என்பதை, எளிதான செயல்முறை மூலம் நீங்கள் சரிபார்க்கலாம்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் மானியத் தகவலைப் பெறலாம்:
1. முதலில் www.mylpg.in என்ற வலைத்தளத்தை திறக்கவும்.
2. இப்போது உங்களுக்கு ஸ்க்ரீனின் வலது புறத்தில் எரிவாயு நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர்களின் (LPG Cylinder) புகைப்படத்தைக் காண்பீர்கள்.
3. இங்கே நீங்கள் உங்கள் சேவை எரிவாயு சிலிண்டர் வழங்குநரின் புகைப்படத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. இதற்குப் பிறகு ஒரு புதிய விண்டோ திரையில் திறக்கும். இது உங்கள் எரிவாயு சேவை வழங்குநருடையதாக இருக்கும்.
5. இப்போது வலதுபுறத்தில் மேல் பக்கம் சைன் இன் மற்றும் புதிய பயனர் ஆப்ச்ஷனை டேப் செய்யவும்.
6. உங்களுக்கு ஏற்கனவே இதில் ஒரு ஐ.டி இருந்தால், அதன் மூலம் லாக் இன் செய்யவும். உங்களுக்கு இதில் ஐ.டி இல்லையென்றால், ‘நியூ யூசர்’-ல் டேப் செய்து வலைத்தளத்தில் லாக் இன் செய்யவும்.
7. இப்போது உங்கள் முன் புதிய விண்டோ திறக்கும். இதில், வலது பக்கத்தில் ‘வியூ சிலிண்டர் புக்கிங் ஹிஸ்டரி’- ஐ கிளிக் செய்யவும்.
8. உங்களுக்கு எந்த சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் வழங்கப்பட்டது, எப்போது வழங்கப்பட்டது ஆகிய தகவல்கள் இங்கே கிடைக்கும்.
9. இதனுடன், நீங்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்திருந்தால், உங்களுக்கு மானியப் பணம் கிடைக்காமல் இருந்தால், ஃபீட்பேக் என்ற பட்டனில் கிளிக் செய்யவும்.
10. இப்போது நீங்கள் மானியப் (LPG Subsidy) பணம் கிடைக்காததற்கான புகாரையும் தாக்கல் செய்யலாம்.
11. இது தவிர, 18002333555 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து புகாரை பதிவு செய்யலாம்.
ALSO READ:LPG Subsidy | சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுமா? மத்திய அரசின் திட்டம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR