உலகளவில் பட்டென உயிரை பறிக்கும் 2 நோய்கள் இவை தான் - உலக சுகாதார மையம்

Heart health awareness WHO : உலகளவில் உயிரை சீக்கிரம் பறிக்கக்கூடிய இரண்டு நோய்கள் என்றால் மாரடைப்பு, பக்கவாதம் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 30, 2024, 03:05 PM IST
  • உலகை அச்சுறுத்தும் இரண்டு நோய்கள்
  • 18 மில்லியன் பேர் இறப்பதாக ஆய்வில் தகவல்
  • இந்தியாவிலும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்
உலகளவில் பட்டென உயிரை பறிக்கும் 2 நோய்கள் இவை தான் - உலக சுகாதார மையம் title=

Heart health awareness WHO : உலகளவில் அதிகமானோரின் உயிரிழப்புகளுக்கு காரணமான இரண்டு நோய்களை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய இரண்டு நோய்களால் மட்டுமே அதிகமானோர் இறப்பதாகவும் அது தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இரண்டு நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 18 மில்லியன். தென்கிழக்கு ஆசியாவில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 3.9 மில்லியன். ஆண்டுதோறும் உலக இதய தினம் செப்டம்பர் 29 ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. இந்த ஆண்டும் ‘Use Heart for Action’ என்ற தலைப்பில், அதாவது செயலுக்கு இதயத்தை பயன்படுத்து என்ற கருப்பொருளில் உலக இதய திடம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது உலக சுகாதார மையம். 

மேலும் படிக்க | பெண் பிள்ளைகளுக்கு அப்பாவை அதிகமாக பிடிப்பது ஏன்? காரணம் இதுதான்!

மாரடைப்புக்கு காரணம் என்ன?

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணம் புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுகள், உப்பு அதிகரிப்பு, உடற் பயிற்சியின்மை, உடல் செயலற்ற தன்மை, அதிகப்படியாக மது அருந்துவது போன்ற மோசமான வாழ்க்கை முறைகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் நான்கில் ஒருவருக்கு இரத்த அழுத்தம் உள்ளது. 10 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. 

ஆரோக்கியமாக வாழ வேண்டுமா?

பெங்களூருவைச் சேர்ந்த இருதயவியல் டாக்டர் எஸ் வெங்கடேஷ் பேசும்போது, நீண்ட மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு இதய ஆரோக்கியம் அடிப்படை என்று கூறியுள்ளார். மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற முன்கூட்டிய எச்சரிக்கை அறிகுறிகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும் என கூறியுள்ள அவர், இதய ஆரோக்கியம் குறித்து போதுமான விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

ஆரோக்கியமான வாழ என்ன செய்ய வேண்டும்?

காலையில் சீக்கிரம் எழுவது, இரவில் 9 மணிக்குள்ளாக உறங்கச் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும், தவறாமல் காலை, மாலை உடற்பயிற்சி செய்துவிட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது மருத்துவரை சந்தித்து உடலை பரிசோதித்துக் கொள்ளவும். வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தியானம், யோகா ஆகியவற்றையும் பயிற்சி செய்யுங்கள். 

மேலும் படிக்க | ஆப்பிள் சூப்பர்புட் தான்... ஆனால், அளவிற்கு மிஞ்சினால் ஆரோக்கியம் காலியாகிவிடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News