உங்க குழந்தை சொன்ன பேச்சை கேட்கலையா.... ‘இந்த’ தவறுகள் காரணமாக இருக்கலாம்..!!

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஆனால் புகார் செய்வதற்கு முன், நீங்கள் பெற்றோராக  ஏதேனும் தவறு செய்தீர்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 1, 2024, 08:38 AM IST
  • குழந்தை ஏதேனும் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தால், அதில் குறுக்கிட்டு தொந்தரவு செய்யாதீர்கள்.
  • குழந்தைகள் அடங்காமல் போக வாய்ப்பு உண்டு.
  • குழந்தைகளுக்கு பெற்றோர் மீது அன்பும் மரியாதையும் இருப்பதில்லை.
உங்க குழந்தை சொன்ன பேச்சை கேட்கலையா.... ‘இந்த’ தவறுகள் காரணமாக இருக்கலாம்..!! title=

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. பெற்றோரின் வளர்ப்பில் தான் குழந்தையின் எதிர்காலம் அமைந்துள்ளது. இன்றைய நவீன யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பது என்பது இளம் தலைமுறை பெற்றோருக்கு பெரும் சவாலாக உள்ளது என்றால் மிகையில்லை

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஆனால் புகார் செய்வதற்கு முன், நீங்கள் பெற்றோராக  ஏதேனும் தவறு செய்தீர்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பெற்றோர்கள் செய்யும் சில தவறுகளால் குழந்தைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்காமல் இருக்கலாம் (Parenting Tips). இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு அழகான எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என கனவு காண்கிறார்கள். இதற்காக, இரவு பகலாக உழைத்து, முடிந்தவரை, தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க வழி தேடுகின்றனர். ஆனால் அவர்களின் சில பழக்கவழக்கங்கள் குழந்தையின் நம்பிக்கையை குலைக்கிறது.

பிள்ளைகள் பெற்றோர் மீதான நம்பிக்கை இழக்கும் போது, அவர் சொன்னதை கேட்பதில்லை பிரச்சனைகள் அங்கிருந்து தான் தொடங்குகின்றன. அதிலும் டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தாங்கள் பேச்சை கேட்பதில்லை என அதிகம் புகார் கூறுவதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

மேலும் படிக்க | உங்கள் குழந்தைக்கு படிப்பில் கவனம் இல்லையா... ‘இந்த’ மூளை விளையாட்டுகள் உதவும்..!!

பல பெற்றோர்கள் குழந்தையை நல்ல ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என பேரார்வத்தில்,  கட்டுப்பாடு தேவை என்ற எண்ணத்தில் எதற்கெடுத்தாலும், காரணம் கூட கேட்காமல் அடிக்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். குழந்தைகளுக்கு அத்தகைய பெற்றோர் மீது அன்பும் மரியாதையும் இருப்பதில்லை. அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்பதை நிறுத்திவிடுகிறார்கள். எனவே, உங்கள் குழந்தை உங்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், நீங்கள் அவர்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

பல சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகள் தவறு செய்யும் போது, உரத்த குரலில் கத்தி, திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். அப்போது, குழந்தைகளுக்கு என்ன செய்வது என்று புரிவதில்லை. இத்தகைய நிலைமையில் குழந்தைகள் அடங்காமல் போக வாய்ப்பு உண்டு, மேலும் அவர்கள் எப்போதும் திட்டு வாங்குவதற்கும், அடி வாங்குவதற்கு மனதளவில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள பழகிக் கொள்கிறார்கள். மாறாக, அவர்கள் தவறை தருத்திக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளித்து ஊக்கப்படுத்துவது தான் சிறந்தது.

பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தவறு செய்யும் போது, அதனை மீண்டும் குத்திக் காட்டி மனதை வருத்தப்பட செய்கிறார்கள். இதன் காரணமாக, குழந்தைகள் உங்களை  பதிலுக்கு திட்டுவது அல்லது வருத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.  மேலும், தான் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும், நீங்கள் அவர்களைக் விமர்சனம் தான் செய்வீர்கள் என்று அவர்கள் மனதில் முடிவு செய்கிறார்கள். எனவே இதைச் செய்வதைத் தவிர்க்கவும். இதனால் குழந்தைகள் அடங்காமல் போக வாய்ப்பு உண்டு

குழந்தை ஏதேனும் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தால், அதில் குறிக்கிட்டு தொந்தரவு செய்யாதீர்கள் . அவரது குறைபாடுகளைச் சுட்டிக்காட்டாதீர்கள். பெற்றோர்கள் குழந்தைக்கு சில வேலைகளைக் கொடுக்கும் போது, குழந்தை அவர்களின் அறிவுறுத்தல்களின்படி வேலை செய்தாலும், பெற்றோர்கள் கிண்டல் அல்லது குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினால், அவர் அந்த வேலையை செய்யாமல் போகும் வாய்ப்பு உண்டு.  என்ன செய்தாலும் நீங்கள் அவர்களை திட்டுவீர்கள் என்பது அவர்களின் மனதில் தோன்றும்.

மேலும் படிக்க | குழந்தை வளர்ப்பு... பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டிய ‘சில’ முக்கிய விஷயங்கள்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News