குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?

Parenting Tips Tamil : குழந்தைகள்தான், வருங்கால சமூகம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, நாம் அவர்களிடம் கூறவே கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Sep 1, 2024, 05:48 PM IST
  • குழந்தைகளிடம் பெற்றோர்கள் கூறவே கூடாத விஷயங்கள்
  • அவர்களின் மனங்களை பாதிக்கும்..
  • என்னென்ன தெரியுமா?
குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?  title=

Parenting Tips Tamil : குழந்தைகளும், சிறு வடிவில் இருக்கும் மனிதர்கள்தான். நாம் அவர்களுக்கு சிறு வயதில் என்ன பாடம் புகட்டுகிறோமோ, அந்த பாடம்தான் வளர்ந்த பின்பு அவர்களின் மனங்களில் நிற்கும். அவர்களுக்கு சிறு வயதில் எந்த அளவிற்கு பாசத்தை காட்டுகிறோமோ, அந்த அளவிற்கு அவர்கள் பாசமிகு மனிதர்களாக வளர்வார்கள். அதே போல, சிறுவயதிலேயே வெறுப்பான வார்த்தைகளை பேசி வளர்த்தால், அவர்களும் வெறுப்பானவர்களாகத்தான் வளர்வர். ஒரு பெற்றோராக, நாம் சில விஷயங்களை குழந்தைகளிடத்தில் பேசவே கூடாது. அவை என்னென்ன தெரியுமா? 

நெகடிவான வார்த்தைகள்:

பெற்றோர்கள், குழந்தைகளிடம் பயன்படுத்தும் நெகடிவான வார்த்தைகள் அவர்கள் வளர்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதனால், அவர்களுக்கு அவர்கள் மீதே எதிர்மறையான எண்ணங்களும் வளரலாம். எனவே, அவர்கள் எந்த வேலை செய்தாலும், அது பெரிய வேலையாக இல்லை என்றால் கூட, அது குறித்து அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டுமே தவிர, எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. 

மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் பொய் கூறினால் என்ன செய்யலாம்..?

ஒப்பிடுவது:

குழந்தைகள் மட்டுமல்ல, யாரையுமே ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது. குறிப்பாக உங்கள் குழந்தையை ஒத்த வயதுடன் இருக்கும் வேறு குழந்தைகளுடன் ஒப்பிடுவது, அவர்கள் உடன் பிறந்தவர்களுடன் ஒப்பிடுவது போன்ற விஷயங்களை செய்ய கூடாது. இதனால், அவர்களுக்கு நாம் பிறரை விட தகுதி குறைந்தவரோ என்ற எண்ணம் ஏற்படலாம்.

சாபம் விடுவது:

குழந்தைகள் பிறக்கும் போது, வளரும் போது எதையும் கற்றுக்கொண்டு வருவதில்லை. ஒரு பெற்றோராக அவர்களை நன்றாக வளர்க்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். கடுஞ்சொற்கள் கூட அவர்கள் மனதை சுட்டுவிடும். அவர்கள் ஏதேனும் தவறு செய்தால், “உனக்கெல்லாம் எதிர்காலத்தில் நல்லதே நடக்காது..நீயெல்லாம் எங்க உருப்பட போற..” போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். இது, அவர்கள் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் ஆழமாக பதிந்து விடும். பெரியவர்கள் ஆனாலும் இதிலிருந்து அவர்களால் மீண்டு வர இயலாது. 

அழுவதை குறை சொல்வது:

சிரிப்பு, புன்னகை, கோபம் போல, சோகமும் ஒரு அற்புத உணர்வுதான். சோகம்-கோபம் ஏற்படும் போது அழுகை வருவதும் ரொம்ப இயல்பு. பெரியவர்களுக்கே இந்த நிலை எனும் போது, குழந்தைகளால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியுமா என்ன? எனவே, அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக அழும் போது அவர்களிடம் “இதுக்கெல்லாமா அழுவாங்க..இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா..” என்று கேட்காதீர்கள். குறிப்பாக ஆண் பிள்ளைகள் அழுதால் “பொண்ணு மாதிரி அழாத..” என்று கூறுவதை நிறுத்துங்கள். ஆண் பிள்ளைகள் அழுதால் என்ன? சொத்து குறைந்து விடுமா? குழந்தைகள் அழ நினைத்தால் அவர்களை சுதந்திரமாக அழ விட்டு பின்பு என்ன ஆனது என்பதை கேளுங்கள். 

தகுதியை குறைத்து சொல்வது:

குழந்தைகளிடம் ஒரு வேலை கொடுத்தால் அதை ஒரு சிலர் சரியாக செய்வர். ஒரு சிலரால் அதை சரியாக செய்து முடிக்க முடியாது. சில குழந்தைகள்  ஒரு வேலையில் சொதப்பும் போது, “நீயெல்லாம் ஒன்னுத்துக்கும் லாயக்கி இல்ல..உன்ன பெத்ததுக்கு ஒரு கல்லை பெத்துருக்கலாம்..” என்று சில பெற்றோர் அவர்களது குழந்தைகளிடத்தில் கூறுவர். இப்படி பேசும் போது அந்த குழந்தைக்கு என்ன தோன்றும் தெரியுமா? “ஒரு வேளை நாம பொறக்காமையே இருந்திருந்தா அம்மா/அப்பா சந்தோஷமா இருந்திருப்பாங்கல்ல?” என்பதுதான். இது போன்ற ஒரு எண்ணம் உங்கள் குழந்தைக்கும் வராமல் இருக்க, இது போல தகுதியை குறைக்கும் வார்த்தைகளை கூறாமல் இருங்கள். 

மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: உங்கள் குழந்தை தோல்வியால் துவண்டுவிட்டால் என்ன செய்யலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News